பாடம் எடுக்கத் தயாரான தனுஷ்.. வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகி வருகிறது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். தொடர்ந்து அவரது படங்கள் ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன் படங்கள் ஓடிடியில் ரிலீசான நிலையில், படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் தனுஷ் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மிகவும் ஏமாற்றத்தில் இருந்தனர்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியான அவரது திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

 சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்தப் படத்தில் ஆண் -பெண் நட்பை மையமாக கொண்டு மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். முன்னதாக இவர் தனுஷை யாரடி நீ மோகினி, குட்டி போன்ற படங்களில் இயக்கியிருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின், நானே வருவேன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

செப்டம்பர் 29ம் தேதி ரிலீஸ்?

செப்டம்பர் 29ம் தேதி ரிலீஸ்?

இந்தப் படம் இம்மாத இறுதயில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அந்தப் படத்துடன் நானே வருவேன் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு தரப்பு இதுகுறித்த உறுதியான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இதனிடையே இந்தப் படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளும் சிறப்பாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளன.

வாத்தி படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

வாத்தி படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ் நடித்துவரும் இருமொழிப் படமான வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாத்தி டிசம்பர் 2ம் தேதி முதல் பாடம் எடுக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்களுக்கு வெயிட்டிங்

அடுத்தடுத்த அப்டேட்களுக்கு வெயிட்டிங்

பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் தனுஷிற்கு சம்யுக்தா மேனன் ஜோடி சேர்ந்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X