வா வாத்தி பாடலில் பட்டையை கிளப்பும் தனுஷ்.. வெளியானது தனுஷ் பாடிய வீடியோ!

சென்னை : தனுஷ் -சம்யுக்தா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது வாத்தி படம்.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.

கல்விக் கொள்கைக்கு எதிரான இந்தப் படத்தில் சாதாரணமாக அனைவருக்கும் எளிமையாக கிடைக்க வேண்டிய கல்வி குறித்து விழிப்புணர்வு பதிவுகள் காணப்பட்டன.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. அதில் திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. படத்தில் தனுஷ், நித்யா மேனன் நடிப்பு சிறப்பாக அமைந்தது.

வாத்தி படம்

வாத்தி படம்

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தனுஷின் வாத்தி படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கில் வாத்தி மற்றும் சார் என ரிலீசான இந்தப் படம், ரசிகர்களை குறிப்பாக தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்மழை பொழிந்து வருகிறது. படத்தை தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.

கல்வியின் அவசியம்

கல்வியின் அவசியம்

ஏழைகளுக்கும் கல்வி சிறப்பான அளவில் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தப் படம் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் சம்யுக்தா தனுஷிற்கு ஜோடியாகியிருந்தார். சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். படத்தில் வாத்தியாராக நடித்திருந்த தனுஷ், தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

தனுஷ் தெலுங்கு என்ட்ரி

தனுஷ் தெலுங்கு என்ட்ரி

இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் தனுஷ். தமிழில் தன்னுடைய முதல் படம் கொடுத்த அதே பதற்றத்தை தெலுங்கில் வெளியான இந்தப் படம் கொடுத்துள்ளதாக தனுஷ் முந்தைய தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவருக்கு தெலுங்கில் இந்தப் படம் சிறப்பான அறிமுகத்தையே கொடுத்துள்ளது.

தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட்டம்

தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் ரசிகர்களை காட்டிலும் தெலுங்கில் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக வா வாத்தி பாடல் அதிகமான அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தனுஷ் பாடிய பாடல் வெர்ஷன்

தனுஷ் பாடிய பாடல் வெர்ஷன்

இந்நிலையில் வா வாத்தி பாடலின் தனுஷ் வெர்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இந்தப்பதிவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த பாடல் வீடியோவில் தனுஷ் தன்னுடைய கேப்டன் மில்லர் லுக்கில் காணப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X