கேப்டன் மில்லர் பட்ஜெட் பல கோடி... ஆனால் தனுஷ் சம்பளம் இவ்வளவு தானா..?

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

பீரியட் ஜானரில் ஹை பட்ஜெட் படமாக கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து ஷாக்கிங்கான தகவல் கிடைத்துள்ளது.

 தனுஷின் கேப்டன் மில்லர்

தனுஷின் கேப்டன் மில்லர்

வாத்தி திரைப்படத்தின் வெற்றி ஒருபக்கம், போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் புது வீடு என மாஸ் காட்டி வருகிறார் தனுஷ். அதே மகிழ்ச்சியில் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வாத்தியில் நடித்துக்கொண்டிருக்கும் போதே கேப்டன் மில்லர் படத்துக்கு பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

 ஹை பட்ஜெட்டில் கேப்டன் மில்லர்

ஹை பட்ஜெட்டில் கேப்டன் மில்லர்

ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை பீரியட் ஜானரில் இயக்கி வருகிறார். இதற்காக தென்காசி பகுதிகளில் வின்டேஜ் லுக்கில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஏராளமான குதிரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த படமும் செட் போடப்பட்டு எடுக்கப்படுவதால் பட்ஜெட் மட்டுமே 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

 தனுஷின் சம்பளம் இவ்வளவு தானா

தனுஷின் சம்பளம் இவ்வளவு தானா

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை ரவுண்டு அடித்து வரும் தனுஷ், 35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால், கேப்டன் மில்லர் படத்துக்கு அவர் மொத்தமே 20 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சிற்றம்பலம், வாத்தி என தனுஷின் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலித்துள்ளது. இதனால், கேப்டன் மில்லர் படத்துக்கு தனுஷின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ 20 கோடி மட்டுமே வாங்கியுள்ளாராம்.

 தீபாவளி ரேஸில் கேப்டன் மில்லர்

தீபாவளி ரேஸில் கேப்டன் மில்லர்

தனுஷுடன் பிரியா பவானி சங்கர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், கேப்டன் மில்லர் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ் வெளியாகி தனுஷின் லுக் வைரலானது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் மிரட்டலாக உருவாகி வரும் கேப்டன் மில்லர், தீபாவளிக்கு வெளியானால் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி கன்ஃபார்ம் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

 ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் படத்தின் BGM குறித்து அப்டேட் கொடுத்திருந்தார் ஜிவி பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பின்னர் கேப்டன் மில்லருக்கு தான் மாஸ்ஸான பிஜிஎம் அமைந்துள்ளது என தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனால் கேப்டன் மில்லர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக தனுஷின் ரசிகர்களுக்கு செம்ம கமர்சியல் பேக்கேஜ்ஜாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X