அம்மாடியோவ்... தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷுக்கு சம்பளம் இத்தனை கோடிகளா?!
சென்னை: தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தெலுங்கில் டாலர் ட்ரீம்ஸ், ஃபிடா, லீடர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தனது முதல் படமான டாலர் ட்ரீம்ஸ் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சேகர் கம்முலா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் ஒரு இயக்கவுள்ளார்.

பிரமாண்டமாக தயாராகும்..
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகும் அப்படத்தை நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாய் அறிவித்தது.

ட்ரில்லிங்குவல் படம்
இதனை தொடர்ந்து நடிகர் தனுஷும் இப்படம் குறித்து டிவிட்டி தான் நடிப்பதை உறுதி செய்தார். தான் போற்றும் இயக்குநர்களில் ஒருவரின் படத்தில் நடிப்பதில் எக்ஸைட்டாக இருப்பதாகவும், இந்த ட்ரில்லிங்குவல் பேனரில் நடிப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

தனுஷின் சம்பளம்
இந்நிலையில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் நடிக்க தனுஷ் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் தனுஷ் சேகர் கம்முலா படத்தில் நடிக்க 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சம்பளம்
தனுஷின் சினிமா கேரியரில் அவர் வாங்கும் அதிக சம்பளம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சேகர் கம்முலாவின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி.

ஃபிடா திரைப்படம்
ஏற்கனவே சேகர் கம்முலாவுடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார். அவரது இயக்கத்தில் வருண் தேஜ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஃபிடா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து சாய் பல்லவியை வைத்து லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கினார் சேகர் கம்முலா.

மாரி 2 படத்தில்..
அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் விரைவில் மீண்டும் சாய் பல்லவியை இயக்கவுள்ளார் சேகர் கம்முலா. ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் மாரி 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











