பயோ பிக் ஹீரோவா தனுஷ்.. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைகிறார்?
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தற்போது இயக்கத்திலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ்.
இந்த படங்களை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டிறியுள்ளது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை படங்கள் மட்டுமில்லாமல் தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா படமும் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் கைவசம் தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் காணப்படுகின்றன. இயக்குநராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து வருகிறார் தனுஷ். இதனிடையே பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவர் அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அவரே நடித்தும் தயாரித்தும் உள்ளார். முற்றிலும் இளைஞர் பட்டாளத்துடன் இந்தப் படம் உருவாகியுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு தனுஷிற்கு மிகவும் சிறப்பானதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா படமும் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைந்து வரும் தனுஷ், இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் தனுஷ் எப்படி செட்டாவார் என்று கேள்வி எழுந்த நிலையில் படத்தின் போஸ்டர்கள் அதற்கு பதிலாக அமைந்தன. அதில் இளம்வயது இளையராஜாவை அப்படியே பிரதிபலித்திருந்தார் தனுஷ்.
சந்திரபாபு பயோபிக்: தான் நடிக்கும் கேரக்டர்களை சிறப்பாக்கும் கலை தனுஷிற்கு கை வந்ததாக உள்ள நிலையில், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அறிவிப்பு வெளியானதுடன் இந்த படம் குறித்து அடுத்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்ததாக தனுஷ், நடிகர் சந்திரபாபுவின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து வலைப்பேச்சு நிகழ்ச்சியில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சந்திரபாபுவின் வாரிசாக ஒருவர் உள்ள நிலையில் இந்த படம் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 3 கோடி ரூபாய் கொடுத்து ரைட்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் சார்லி சாப்லின்: தற்போது தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருவதால் சந்திரபாபு பயோபிக்கின் இயக்குநர் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. காமெடி நடிகராக மட்டுமில்லாமல் நடனம், ஓவியம், இசை, நாடகம், அழுத்தமான நடிப்பு உள்ளிட்ட பன்முகத்திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் சந்திரபாபு. தென்னிந்திய சார்லி சாப்லின் என்று பாராட்டப்பட்ட இவரது பயோபிக் உருவாக இருப்பதாக கூறப்படுவது அந்த காலகட்டத்தில் ரசிகர்களை மட்டுமில்லாமல் தற்போதைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் விஷயமாகவே அமையும்.


Click it and Unblock the Notifications











