Dhanush: லப்பர் பந்து இயக்குநரின் அடுத்தப்படம்.. அட ஹீரோ இவரா.. சூப்பரப்பு!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்/ சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ். ராயன் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக இட்லி கடை படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதனிடையே லப்பர் பந்து இயக்குநருடன் தனுஷ் அடுத்ததாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, அடுத்தடுத்து இளையராஜா பயோ பிக் மற்றும் பாலிவுட் படம் என பிசியாகவுள்ளார் தனுஷ்.

இயக்குநர் தனுஷ்: இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார் தனுஷ். அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இடையில் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் தனுஷ் அடுத்ததாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை இட்லி கடை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லப்பர் பந்து இயக்குநருடன் கூட்டணி: லப்பர் பந்து படத்தின் மூலம் இந்த ஆண்டில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இந்த படத்தில் தெருக்களில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து அவர் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தனர். இந்த படத்தின் கதைக்களம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக தனுஷையும் இதே போன்ற கதைகளத்தில் அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே தனுஷ் அடுத்தடுத்து இளையராஜாவின் பயோபிக் மற்றும் தேரே இஷ்க் மெயின் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கிராமத்து கிரிக்கெட்: லப்பர் பந்து படத்தில் கிராமங்களில் நடக்கும் கிரிக்கெட்டின் அலப்பறைகளை கொடுத்திருந்தார் தமிழரசன் பச்சமுத்து. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படம் அட்டக்கத்தி தினேஷை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது. படத்தில் பெண் கதாபாத்திரங்களும் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்தது. இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான ஈகோவை சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருந்த தமிழரசன் பச்சமுத்து மிகச்சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார்.


Click it and Unblock the Notifications











