twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பிரதர்ஸ்.. நானே வருவேன் 2வது பாகத்திற்கு ரெடி!

    |

    சென்னை : தனுஷ் இரட்டை வேடங்களில் கலக்கியுள்ள படம் நானே வருவேன். படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் அவர் வித்தியாசம் காட்டியுள்ளார்.

    நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தனுஷ் செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் ஹாரர் த்ரில்லர் ஜானரில் கொடுத்துள்ளார் செல்வராகவன்.

    படத்திற்கு கதை திரைக்கதையை தனுஷ் எழுதியுள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

    ஆயிரத்தில் ஒருவன் பாகம்- 2 ..சோழ மன்னனாக தனுஷ் நடிக்கிறார்..பார்த்திபன் பகிர்வு ஆயிரத்தில் ஒருவன் பாகம்- 2 ..சோழ மன்னனாக தனுஷ் நடிக்கிறார்..பார்த்திபன் பகிர்வு

    நானே வருவேன் படம்

    நானே வருவேன் படம்

    நடிகர் தனுஷ் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நானே வருவேன் படம் ரசிகர்களை அதிகமாக கவரத் தவறியுள்ளது. தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஹாரர்-த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படத்தில் தன்னுடைய வழக்கமான ஸ்டைலை கொடுக்க செல்வராகவன் தவறியுள்ளார்.

    இரட்டையர்களாக தனுஷ்

    இரட்டையர்களாக தனுஷ்

    இரட்டையர்களான பிரபு, கதிராக படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் ஒருவர் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் சொல்வதை கேட்டு, கதிரை கோயிலில் விட்டுவிட்டு திரும்புகிறார் அவரது அம்மா. இவர்கள் பெரியவர்களாகி பிரபு தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். அவரது மகளுக்கு ஏற்படும் அமானுஷ்ய பிரச்சினையை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதாக கதை நகர்கிறது.

     வலுவில்லாத திரைக்கதை

    வலுவில்லாத திரைக்கதை

    வலுவில்லாத திரைக்கதை காரணமாக யூகிக்க முடிகிற லாஜிக்கே இல்லாத இரண்டாவது பாதி, எந்தவிதமான டச்சிங்கும் இல்லாமல் முடிகிறது. இது செல்வராகவன் படம்தானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அமைதியான பிரபு கேரக்டரிலும், வில்லத்தனமாக சிரித்துக் கொண்டே மிரட்டும் கதிர் கேரக்டரிலும் தனுஷ் அதகளப்படுத்தியுள்ளார்.

    கேரக்டர்களுக்கு உயிர்

    கேரக்டர்களுக்கு உயிர்

    இந்தக் கேரக்டர்களுக்காக அதிகமாக மெனக்கெட்டுள்ள தனுஷ், கேரக்டர்களுக்கு சிறப்பாக உயிர் கொடுத்துள்ளார். ஆனாலும் சிறப்பில்லாத திரைக்கதை அந்த உழைப்பை வீணடித்துள்ளது. முன்னதாக அவரது திருச்சிற்றம்பலம் எளிமையான திரைக்கதையுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்தப் படம் அதை செய்யத் தவறியுள்ளது.

    கேரக்டர்களில் வித்தியாசம்

    கேரக்டர்களில் வித்தியாசம்

    தனுஷ், 2 வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். அமைதி, சாந்தம், மகளிடம் பாசம் என பிரபு கேரக்டர் ஒரு பக்கம் நகர, வில்லத்தனமான கதிர் சிரித்துக்கொண்டே மிரட்டுகிறார். நீண்ட தலைமுடி, கையில் வில் என அவர் லுக்கே அதகளப்படுத்துகிறது. அந்த கேரக்டர்களுக்கு நடிப்பால் உயிர்கொடுத்திருந்தாலும் வலுவில்லாத திரைக்கதை, அந்த உழைப்பை வீணடித்திருக்கிறது.

    தமிழகத்தில் ரூ.10 கோடி வசூல்

    தமிழகத்தில் ரூ.10 கோடி வசூல்

    தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களில் இந்தப் படம் தமிழகத்தில் 10 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் பாதி சிறப்பாக அமைந்துள்ளதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    மீண்டும் கூட்டணி

    மீண்டும் கூட்டணி

    இந்நிலையில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி மீண்டும் புதிய படத்திற்காக தாணு தயாரிப்பில் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்த தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் அந்தப் படம் ஆயிரத்தில் ஒருவனாக இருக்குமா அல்லது நானே வருவேன் 2 படமாக இருக்குமா என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actor Dhanush -selvaraghavan combination joined again with new movie wish Dhanu production
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X