For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா கையால சாப்பிடனும்மாம்.. 2 வாரங்களில் அமெரிக்காவில் இருந்து திரும்பும் தனுஷ்!

    |

    சென்னை: நடிகர் தனுஷ் 2 வாரங்களில் அமெரிக்காவில் இருந்து திரும்ப உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கடைசியாக அவரது நடிப்பில் கர்ணன் படம் வெளியானது.

    Exclusive: தளபதி படத்தில நடிக்கணும்னா ஸ்க்ரிப்ட் கூட கேட்கமாட்டேன்.. இவன் தான் உத்தமன் நடிகை சாரா!Exclusive: தளபதி படத்தில நடிக்கணும்னா ஸ்க்ரிப்ட் கூட கேட்கமாட்டேன்.. இவன் தான் உத்தமன் நடிகை சாரா!

    மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது.

    ஜகமே தந்திரம்

    ஜகமே தந்திரம்

    ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இந்தப் படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

    அமெரிக்கா பயணம்

    அமெரிக்கா பயணம்

    இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் தனுஷ் மனைவி மற்றும் மகன்களுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    மார்ச்சில் படப்பிடிப்பு

    மார்ச்சில் படப்பிடிப்பு

    அங்கு படம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்ட தனுஷ், கடந்த மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்றார். சுமார் 4 மாதங்கள் ஆன நிலையில் நடிகர் தனுஷ் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Jagame Thandhiram Trailer Biggest Hidden Details revealed | Dhanush, Aishwarya Lekshmi | NETFLIX
    திரும்புவதில் சிக்கல்

    திரும்புவதில் சிக்கல்

    ஹாலிவுட் படத்தில் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்த நிலையில் ஒரு மாதம் இதற்காக பயிற்சி மேற்கொண்டார் தனுஷ். தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடிகர் தனுஷ் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    காத்திருக்க முடியாது

    காத்திருக்க முடியாது

    இதனால் நான்கு மாதங்கள் அங்கேயே தங்க வேண்டியதானது. இந்நிலையில் இன்னும் 2 வாரங்களில் நடிகர் தனுஷ் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனது அம்மாவின் கையால் சாப்பிட இனியும் காத்திருக்க முடியாது என்று தனுஷ் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நாவலை அடிப்படையாக கொண்டு

    நாவலை அடிப்படையாக கொண்டு

    தி கிரே மேன் படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. மார்க் கிரேனேவின நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் வேக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிக்கா ஹென்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Dhanush set to return from US. Dhanush left to US from Febraury for The Grey Man movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X