இளமை திரும்புதே… மனைவியுடன் படு ரொமான்ஸ்… பாட்டுப்பாடி அசத்தும் தனுஷ் !
சென்னை : நடிகர் தனுஷ் மனைவியை கொஞ்சி பாடிய ரொமான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வரும் தனுஷ். ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக தனுஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியுள்ளார்.

தி கிரே மேன்
தனுஷின் இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரின் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகியோருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

மாபெரும் வெற்றி
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப்பெற்றது. இந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே, தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்புக்காக ஹாலிவுட் சென்றுவிட்டார் தனுஷ்.

அமெரிக்காவில்
தனுஷின் ஒவ்வொரு படமும் தற்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாக வசூல்செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் முன்பை விட தற்போதுஅவருக்கு ரசிகர் பட்டாளமும் கூடிவிட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து படு பிஸியாக இருந்துவரும் தனுஷ் தனது குடும்பத்தினரையும் அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளார். படப்பிடிப்பு போக ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
.dhanushkraja nailing it 🔥😍Troll_Cinema pic.twitter.com/TYeewRwF47
— TC (TrollCinemaOff) May 3, 2021
மனைவியுடன் ரோமான்ஸ்
இந்நிலையில், தனுஷ், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் இளமைத் திரும்புதே என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது மனைவியை அழகாக கொஞ்சிய ரொமான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது. இந்த வீடியோ தனுஷ் ரசிகர்களால் தாறுமாறாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











