அம்மா டைரக்ஷன் சூப்பரா? தாத்தா நடிப்பு டக்கரா?.. லால் சலாம் படம் பார்க்க வந்த தனுஷின் மகன்கள்!
சென்னை: 3, வை ராஜா வை திரைப்படங்களை அடுத்து ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், தாத்தாவின் படத்தை பார்க்க தனுஷின் மகன்கள் தியேட்டருக்கு வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌரவக் கதாபாத்திரத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் மையக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நடிகர்கள் செந்தில், தம்பி ராமைய்யா நடிகைகள் நிரோஷா, ஜீவிதா எனப் பலரும் நடித்துள்ளனர். 90களில் நடந்த கதை, கிரிக்கெட் மற்றும் மத அரசியலைப் பேசும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

பொதுமக்கள் கருத்து: இந்நிலையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் லால் சலாம் ஒரு முக்கியமான படம் என்று சொல்லாம், முதல் பாதியின் கடைசி 20 நிமிடம் தெறிக்கவிட்டு விட்டது. அதுவும் இரண்டாம் பாதி வேறலெவிலில் இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் கட்சி அருமையாக இருந்தது. வழக்கமாக தலைவர் எப்போதும் மாஸ் தான். ஆனால், அதைவிட பல சூப்பராக இருந்தது. ரஜினி ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றார்.

மொய்தீன் பாய் மிரட்டிவிட்டார்: படம் பார்த்த மற்றொரு ரசிகர், படம் நன்றாக இருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரம் இருந்தது. அந்த ஒவ்வொரு கேரக்டருக்கும், ஒரு தனித்தனி கதையை கொடுத்து நன்றாக படத்தின் கதையை கொண்டு சென்றுள்ளார். ரஜினியின் மொய்தீன் பாய் கதாபாத்திரம் சூப்பர். முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பராக வந்து இருக்கும், கிளைமாக்ஸ்சில் வரும், ட்விஸ்ட்டுக்காக படத்தை பார்க்கலாம் என்றார்.
மனிதர்கள் தான் முக்கியம்: மனுஷங்கதான் முக்கியம் எந்த மதமும் கிடையாது எந்த சாதியும் கிடையாது, இந்து, முஸ்லிம், கிறிஸ்து என எந்த மதமும் முக்கியம் இல்லை. மனிதர்கள் தான் முக்கியம் என்பதை தலைவர் அழுத்தம் திருத்தமாக நன்றாக சொல்லி இருக்கிறார். மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி மிரட்டிவிட்டார். கதை முழுக்க ரஜினிகாந்த் தேவையான இடத்தில் வருகிறார். படம் போர் அடிக்காமல் போகுது என்று பொதுமக்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனம்: லால் சலாம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். எனவே லால் சலாம் படம், முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி முதல் 8 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் விஸ்ணு விஷால் மற்றும் விக்ராந்திற்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிந்து வருகின்றனர்.
தாத்தாவின் படம் பார்க்கவந்த பேரன்: இந்நிலையில், தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அம்மா இயக்கி தாத்தா நடித்த படத்தை பார்க்க திரையரங்குக்கு வந்தனர். படம் பார்க்க வந்த இவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இவர்கள் சென்ற தியேட்டரில் விஷ்ணு விஷாலின் தனது மகனுடன் வந்திருந்தார். அவரின் குழந்தையை பார்த்த தனுஷின் மகன் ஹாய் சொல்லி உங்க பையான என கையை பிடித்து விளையாடினார்.


Click it and Unblock the Notifications











