மோசமான கேங்ஸ்டர் சுருளி... எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜிக்குதான்... நடிகர் தனுஷ் பாராட்டு

சென்னை : உலக அளவில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் இன்று நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் மற்றும் சுருளி கேரக்டருக்காக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜிற்கு நடிகர் தனுஷ் தன்னுடைய நன்றிகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெட்பிளக்சில் வெளியீடு

நெட்பிளக்சில் வெளியீடு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா லஷ்மி, ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உலகெங்கிலும் ஜகமே தந்திரம் படம் நெட்பிளக்சில் இன்று வெளியாகிறது. படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியானது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷூம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

ஆயினும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், ஓடிடியில் வெளியாவதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஓடிடியில் வெளியான நிலையிலும் தனுஷிற்கு கட்அவுட் வைத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்நிலையில் படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜிற்கு நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

மோசமான கேங்ஸ்டர்

மோசமான கேங்ஸ்டர்

ஜகமே தந்திரம் படம் மற்றும் சுருளி கேரக்டருக்காக கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், படத்தின் ஒவ்வொரு பகுதியை மிகவும் விருப்பத்துடன் நடித்ததாகவும் மிகவும் மோசமான கேங்ஸ்டரான சுருளி கேரக்டரையும் மிகவும் விரும்பி நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

17 மொழிகள்

17 மொழிகள்

இந்த புகழ் அனைத்தும் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது சிறப்பான டீமிற்கே செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படம் உலக அளவில் 190 நாடுகளிலும் 17 மொழிகளிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

I loved every bit of working with you -Dhanush hails Karthik Subburaj

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X