அடுத்தடுத்த கமிட்மெண்ட்.. கேப்டன் மில்லருக்கு பிறகு தனுஷின் அடுத்தப்படம்.. அதுவும் பீரியட் படமா?
சென்னை : நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளன.
இதில் திருச்சிற்றம்பலம் படம் எளிமையான கதைக்களத்துடன் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்தது.
ஆனால் த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்ட நானே வருவேன் படம் ரசிகர்களை கவரத் தவறிவிட்டது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியிலும் திரையரங்குகளிலும் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன் என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனேயே ஓடிடியில் வெளியாகின. ஆனால் அவரது படம் திரையரங்குகளில் வெளியாவதையே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

திருச்சிற்றம்பலம் படம்
இதனிடையே அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாகி உற்சாகத்தை கொடுத்தது. இதனிடையே இந்தப் படம் ரிலீசாகி வெறும் 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.

கலவையான விமர்சனங்கள்
இதனிடையே கடந்த 29ம் தேதி தனுஷின் நானே வருவேன் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தின் முதல் பாகம் மிரட்டிய நிலையில், இரண்டாவது பாகம் சொதப்பலான அனுபவத்தையே ரசிகர்களுக்கு கொடுத்தது.

கேப்டன் மில்லர் சூட்டிங்கில் தனுஷ்
ஆனால் வெற்றி, தோல்வி இதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல், தன்னுடைய அடுத்தப் படமான கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கிற்காக தென்காசிக்கு சென்றுவிட்டார் தனுஷ். பீரியட் படமாக எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதற்காக அங்கு பிரம்மாண்டமான வகையில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இருமொழிப்படம் வாத்தி
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் அடுத்தப் படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷின் வாத்தி படம் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் தனுஷ் அறிமுகமாகவுள்ளார்.

சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ்?
இதனிடையே அடுத்ததாக சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஃபித்தா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்களை தெலுங்கில் கொடுத்தவர். இந்தப் படமும் பீரியட் அரசியல் படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மதராசி தெலுங்குத் தலைவர்?
வரும் ஜனவரி மாத இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் வளர்ந்து வரும் மதராசி தெலுங்கு தலைவராக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், உடனடியாக இடைவெளி இல்லாமல் அடுத்தப் படத்தில் தனுஷ் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











