நடுக்கடலில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் நடுக்கடலில் போட்டில் பயணம் செய்யும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்து அப்ளாஸை அள்ளி வருகிறார்.
அவர் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டது.

ஹாலிவுட் படம்
நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். பாலிவுட்டில் நடித்து வரும் தனுஷ், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

மார்க் கிரேனியின் நாவல்
தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

மனைவியுடன் போட்டில்
இந்நிலையில் படப்பிடிப்பு நாட்கள் போக மற்ற நாட்களில் குடும்பத்துடன் ஓய்வை கழித்து வருகிறார் நடிகர் தனுஷ். தனது மனைவியுடன் போட்டில் பயணிக்கும் தனுஷ் அவரை விதவிதமாக போட்டோ எடுத்துள்ளார்.

வைரலாகும் போட்டோ
இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக கர்ணன் படம் வெளியானது. இந்த படம் பெரும் ஹிட்டானதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











