ஒரு ராஜா நல்லவராம்..இன்னொரு ராஜா கெட்டவராம்.. நானே வருவேன் படம் குறித்து தனுஷ் ட்வீட்!

சென்னை : நானே வருவேன் திரைப்படம் குறித்த முக்கியமான தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனுஷின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ந் தேதி திரையரங்கில் வெளியானது. கர்ணன் படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியான படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்தது.

இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். இவர்களுடன் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

நானே வருவேன்

நானே வருவேன்

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கி வரும் நானே வருவேன் நடத்தில் நடித்து வருகிறார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பின் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதால், இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நானே வருவேன் படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 11ஆம் தேதியும், செப்டம்பர் 30ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

செல்வராகவன் வில்லன்

செல்வராகவன் வில்லன்

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டது என்றும். இதில் செல்வராகவன் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில், இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒரு ஊர்ல இரண்டு ராஜா

ஒரு ஊர்ல இரண்டு ராஜா

இந்நிலையில், நானேவருவேன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 4.40 மணிக்கு வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம் என வித்தியாசமான முறையில் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்பேட்டை வெளியிட்டுள்ளார். தனுஷின் இந்த வித்தியாசமான ட்விட்டால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வாத்தி

வாத்தி

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் வாத்தி படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. வாத்தி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X