காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!

சென்னை : கர்ணன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் ஒரு ட்விட்டரை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மாரிசெல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

ஆதிக்க சாதி, ஒதுக்கப்பட்ட சாதியினருக்கு இடையே நிகழ்ந்த சம்பவத்தை மேற்கொள்காட்டி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மாரிசெல்வராஜ்

இயக்குனர் மாரிசெல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷாவிஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ் , யோகி பாபு,லால், கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

ஞாபகப்படுத்தும் வகையில்

ஞாபகப்படுத்தும் வகையில்

கொடியன்குளம் கிராமத்திற்குள் போலீசார் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர் இதில், இருவர் கொல்லப்பட்டனர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சாதி, ஒதுக்கப்பட்ட சாதியினருக்கு இடையே நிகழ்ந்த சம்பவத்தை மேற்கொள் காட்டி எடுக்கப்பட்ட இப்படம் வன்முறை தீர்வு என்பதை வலியுறுத்துகிறது.

சிறப்பான படம்

சிறப்பான படம்

உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் மட்டும் இன்று திரைப்பிரபலங்களான விஜய்சேதுபதி, விக்ரம், விவேக் என பலர் பாராட்டி வருகின்றனர் . மேலும் அரசியல் கட்சித் தலைவர்களான காங்கிரஸ் எம்பி ஜோதி மணி , திமுக இளைஞர் அணி செயலாளர் ஆகியோரும் படம் சிறப்பாக உள்ளது என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை படம் உணர்ந்துகிறது என்றும் மாரிசெல்வராஜை வெகுவாக பாராட்டினார்.

நன்றி

நன்றி

அனைவரும் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ், ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X