கல்வி அரசியல் பேசும் தனுஷ்... அனல் பறக்கும் வசனங்களுடன் வாத்தி டிரைலர் ரிலீஸ்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என கலக்கி அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தனுஷ்.

வாத்தி

வாத்தி

தனுஷ் நடிப்பில் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள திரைப்படம் வாத்தி. இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்க, தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்த்தா நடித்து வருகிறார். சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வா வாத்தி..நாடோடி மன்னன் பாடல்

வா வாத்தி..நாடோடி மன்னன் பாடல்

இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுகில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான வா வாத்தி, கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாவது பாடலான நாடோடி மன்னன் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.

நிச்சயம் பிடிக்கும்

நிச்சயம் பிடிக்கும்

வாத்தி படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், வாத்தி படம் 90 கால கட்டத்தில் நடக்கக் கூடிய ஒரு கதை. இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம்னு தெரிந்து கொண்டேன். படிப்பு பிரசாதம் மாதிரி, அதை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விக்காதீங்க இதுதான் வாத்தி படத்தின் கதை. இந்தப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.

எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை

படிக்கும் போது அப்பா, அம்மா தானே பீஸ் கட்டிருவாங்கன்னு கவனமின்றி சுத்திகிட்டு இருந்தேன். என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அதன் வலி தெரியுது. எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு மிகவும் அவசியம். எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள் அது தான் உங்களைக் காப்பாற்றும் என்று விழாவில் தனுஷ் பேசியிருந்தார்.

கல்வியில் கிடைக்கிற காசு அரசியலில் கிடைக்காது

வாத்தி திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அதிரடியான பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன. தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும், கல்வியில் கிடைக்கிற காசு அரசியலில் கிடைக்காது, பணம் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம், ஆனால் படிப்புதான் மரியாதையை சம்பாதித்து தரும் போன்ற வசனங்களுடன் டிரைலர் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X