3 நாட்களில் ரூ.51 கோடி வசூலை கடந்த வாத்தி படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது வாத்தி படம்.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் வாத்தி மற்றும் சார் என இந்தப் படம் வெளியானது.

படத்தில் சம்யுக்தா, தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

வாத்தி தனுஷ்

வாத்தி தனுஷ்

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான அவரது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களில் திருச்சிற்றம்பலம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவரது வாத்தி படம் ரிலீசாகியுள்ளது.

தனுஷ் -சம்யுக்தா கெமிஸ்ட்ரி

தனுஷ் -சம்யுக்தா கெமிஸ்ட்ரி

தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வாத்தி மற்றும் சார் என ஒரே நேரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வாத்தி படம் வெளியானது. படத்தில் சம்யுக்தா, தனுஷிற்கு ஜோடியாகியிருந்த நிலையில், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமான இசை

பிரம்மாண்டமான இசை

இந்நிலையில் கல்வியை மையமாக கொண்டு வெளியான வாத்தி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பை செய்த நிலையில், படத்தின் இசை வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தெலுங்கில் அதிக வரவேற்பு

தெலுங்கில் அதிக வரவேற்பு

படத்தின் ரிலீசுக்கு முன்னதாக ஐதராபாத்தில் சார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ் இந்தப் படத்தின் மூலம் நேரடியாக தெலுங்குப்படத்தில் அறிமுகமான நிலையில், படம் வெளியாகி இரு தினங்களிலேயே தமிழை காட்டிலும் அதிகமான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

3 நாட்களில் ரூ51 கோடி வசூல்

3 நாட்களில் ரூ51 கோடி வசூல்


இந்நிலையில் படம் ரிலீசாகி கடந்த 3 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து 51 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி என வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இணையவுள்ளார் தனுஷ். முன்னதாக டி50 படத்தை இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X