நாளை ரிலீசாகும் தனுஷின் வாத்தி படம்.. படத்தை இந்த 5 காரணங்களுக்காக பார்க்கலாம்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நாளைய தினம் ரிலீசாகவுள்ள படம் வாத்தி.

தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி படத்தின்மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் தனுஷ்.

இந்தப் படத்தில் சம்யுக்தா தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்


நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியால் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளார் தனுஷ். இதே உற்சாகத்துடன்தான் நானே வருவேன் படத்திலும் நடித்து அதை ரிலீஸ் செய்தார். ஆனால் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

மிகுந்த எதிர்பார்ப்பில் வாத்தி படம்

மிகுந்த எதிர்பார்ப்பில் வாத்தி படம்


இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் போலவே அடுத்த படமான வாத்தி படத்தையும் வெற்றிப் படமாக்கும் முனைப்பில் உள்ளார் தனுஷ். பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை பார்ப்பதற்கான முதல் காரணமாக அமைந்துள்ளது.

கல்விக்கான முக்கியத்துவம்

கல்விக்கான முக்கியத்துவம்

இந்நிலையில் படத்தில் வாத்தியாராக சிறப்பான கல்வியை பெற மாணவர்கள் எப்போதுமே தகுதி உடையவர்கள் என்ற கான்செப்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது வாத்தி. இந்தப் படம் தெலுங்கிலும் சார் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் தனுஷ் தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளார். இதுவும் இந்தப் படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

வியாபாரமாகியுள்ள கல்வி

வியாபாரமாகியுள்ள கல்வி

படத்தின் இசை வெளியீட்டின்போது பேசிய படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, சேவையாக இருக்க வேண்டிய கல்வி, வியாபாரமாகிவிட்டதை வாத்தி படம் அழுத்தமாக பேசும் என்று கூறியிருந்தார். இந்தக் கதைக்களத்தில் அதிகமான படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், வாத்தி படம் அதிலிருந்து எப்படி வித்தியாசப்படும் என்பதை அறியவும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.

தனுஷ் -சம்யுக்தா காம்பினேஷன்

தனுஷ் -சம்யுக்தா காம்பினேஷன்

படத்தில் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா. தனுஷ் மற்றும் சம்யுக்தாவின் கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. இருவரும் ஆசிரியர்களாக படத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் இந்த காம்பினேஷனுக்காகவும் படத்தை ரசிகர்கள் பார்க்கலாம். இவர்கள் இருவரின் வா வாத்தி பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறப்பான ஜிவி பிரகாஷ் இசை

சிறப்பான ஜிவி பிரகாஷ் இசை

படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக தனுஷ் -ஜிவி பிரகாஷ் கூட்டணியில் அசுரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவும் படத்தை ரசிகர்கள் பார்க்க முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X