Dhanush: திருப்பதியில் நேர்த்திக்கடன் செய்த தனுஷ்.. யாரெல்லாம் கூட போயிருக்காங்கன்னு பாருங்க
சென்னை: நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.
முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், கேப்டன் மில்லர் படம் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப சுதந்திர காலத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இரு தினங்களுக்கு முன்பு மிரட்டலாக வெளியாகியுள்ளது.

திருப்பதியில் நடிகர் தனுஷ் நேர்த்திக்கடன்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. இந்த இரு படங்களும் இருவேறு ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அடுத்த வீட்டு பையன் போன்ற லுக் எப்போதுமே தனுஷிற்கு சிறப்பாக கைகொடுக்கும். அந்த வகையில் இந்தப் படங்களும் அவருக்கு சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தன.
எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கைக்கொடுக்கும் நடிகராக தனுஷ் உள்ளார். தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. முன்னதாக தீபாவளி ரிலீசிற்காக இந்தப்படம் தயாராகி வந்தநிலையில், படத்தின் சூட்டிங் ஏற்பட்ட சில தாமதங்கள் காரணமாக தற்போது டிசம்பர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த போஸ்டரில் தனுஷ் கையில் கன்னுடன் காணப்பட்ட நிலையில், சுற்றிலும் ஏராளமான பிரிட்டீஷ் வீரர்கள் இறந்து கிடந்தனர். கொண்டையுடன் இந்தப் போஸ்டரில் போல்டான தனுஷை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த மாதத்தில் படத்தின் டீசரும் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படம் 3 பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 1970 மற்றும் தற்போதைய காலக்கட்டங்களை மையமாக கொண்டு அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, தன்னுடைய டி50 படத்தில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும் பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார் தனுஷ்.
இந்தப் படத்தில் நீண்ட தாடி மற்றும் தலைமுடியுடன் காணப்பட்டார் தனுஷ். பல மாதங்கள் இந்த லுக்கிலேயே அவரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது திருப்பதி கோயிலுக்கு தன்னுடைய பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார் தனுஷ். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











