மனைவி மகன்களுடன் பழனி கோவிலில் திடீர் சாமி தரிசனம் செய்த பெரிய வீட்டு நடிகர்! இது புதுசாவுல இருக்கு!
சென்னை: நடிகர் தனுஷ் மனைவி மற்றும் மகன்களுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷுட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கோம்பைப்பட்டியில் நடைபெற்று வருகிறது.
இதற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் அங்கேயே தங்கியிருக்கின்றனர்.

ரோப் கார் மூலம்
இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பழனி முருகன் கோவிலில் வழிபட்டார். சாமி தரிசனத்திற்காக ரோப் கார் மூலம் தனுஷ் குடும்பத்தினர் மலை கோவிலுக்கு சென்றனர்.
மரியாதை
பின்னர் கோவிலில் குடும்பத்தினருடன் வழிபட்டார் தனுஷ். அவர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

திரண்ட ரசிகர்கள்
தனுஷ் பழனி கோவிலுக்கு வந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கோவிலில் திரண்டனர். பாதையின் இருபக்கமும் கூடியிருந்த ரசிகர்கள் தனுஷை பார்த்ததும் கத்தி ஆரவாரம் செய்தனர்.

பாதுகாப்பாக..
இதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பாக மீண்டும் ரோப் கார் மூலம் மலையடி வாரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
புதிய கெட்டப்
தனுஷ் சுருளி படத்திற்காக அருவா மீசையில் புதிய கெட்டப்பில் இருந்தார். ஹேர் ஸ்டைலும் வித்தியாசமாக வைத்துள்ளார் தனுஷ். தனுஷை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பட்டியலில்..
அண்மையில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்தார். அந்த வரிசையில் தற்போது தனுஷ் குடும்பத்தினரும் சேர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











