அமெரிக்க திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சியாக கர்ணன்.. குடும்பத்துடன் கண்டுகளித்த தனுஷ்!
சென்னை: கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நடிகர் தனுஷ் கர்ணன் படத்தை அமெரிக்காவில் பார்த்து ரசித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர்ணன்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நல்ல வரவேற்பு
கர்ணன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கர்ணன் படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் ரசித்தது..
பாக்ஸ் ஆபிஸிலும் கர்ணன் படம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் கர்ணன் படத்தை நடிகர் தனுஷ் அமெரிக்காவில் குடும்பத்துடன் கண்டுகளித்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில்..
நடிகர் தனுஷ் தற்போது தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அமெரிக்காவில் உள்ள தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் 'கர்ணன்' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.

அரங்கம் நிறைந்த காட்சி
மேலும் அமெரிக்க திரையரங்குகளில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் நடிகர் தனுஷ் தன்னிடம் கூறியதாக தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











