For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன மனுஷன்யா.. போயஸ் கார்டனில் பூஜை போட்ட கையோடு.. ஹாலிவுட்டுக்கு பறக்கும் தனுஷ் #TheGrayMan

  |

  சென்னை: அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் அடுத்த படைப்பான தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங்கிற்காக இன்று இரவு ஹாலிவுட் செல்கிறார் நடிகர் தனுஷ்.

  ஜகமே தந்திரம், கர்ணன், டி43 என தமிழில் அடுத்தடுத்து மூன்று பட வேலைகளில் ஒரு பக்கம் கவனத்தை செலுத்தி விட்டு, பாலிவுட்டில் வெளியாகவுள்ள அட்ரங்கி ரே படத்தையும் கவனித்துக் கொண்டு இப்போ அடுத்ததாக ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஷூட்டிங்கிற்கு கிளம்புகிறார் நடிகர் தனுஷ்.

  'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்! 'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!

  சென்னை: தனுஷின் புதிய போயஸ் இல்லம்... பூமி பூஜையில் ரஜினிகாந்த்!

  போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் பிரம்மாண்ட புதிய வீட்டின் பூஜையும் நேற்று போடப்பட்டது.

  டி43 முதல் ஷெட்யூல்

  டி43 முதல் ஷெட்யூல்

  இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பிரசன்னா நடித்து வரும் டி43 படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிவுற்றதாக நடிகை மாளவிகா மோகனனே தனுஷ் உடன் இருக்கும் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.

  கர்ணன் டப்பிங்

  கர்ணன் டப்பிங்

  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் கடைசி கட்ட டப்பிங் பணிகளிலும் கலந்து கொண்ட தனுஷ், அதிலிருந்து ஒரு அற்புதமான காட்சி புகைப்படத்தையும் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு டிரெண்ட் செய்தார். சும்மா சங்கு சக்கரம் போல சுழன்று சுழன்று ஒவ்வொரு பட வேலைகளையும் பார்த்து வருகிறார்.

  போயஸ் கார்டனில் வீடு

  போயஸ் கார்டனில் வீடு

  மேலும், போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் புதிதாக கட்டவுள்ள பிரம்மாண்ட வீட்டின் பூஜையும் நேற்று போடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் பூமி பூஜையில் கலந்து கொண்டு மகளையும் மருமகனையும் வாழ்த்திய போட்டோக்கள் நேற்று சமூக வலைதளங்களில் தீயாக பரவின.

  ஹாலிவுட்டுக்கு கிளம்பியாச்சு

  ஹாலிவுட்டுக்கு கிளம்பியாச்சு

  இந்நிலையில், இன்று இரவு நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்புக்காக ஹாலிவுட்டுக்கு பயணம் செய்யவுள்ளார். அதனை முன்னிட்டு #TheGrayMan என்கிற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பல மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் கிரே மேன் உருவாகிறது.

  இந்தியாவின் பெருமை

  இந்தியாவின் பெருமை

  கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. கொரோனா பரவல் இருக்கும் இந்த சூழ்நிலையிலும் ஓயாமல் உழைத்து வரும் நடிகர் தனுஷ் பாதுகாப்பாக சென்று வென்று வர வேண்டும் என்பதே ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்களின் ஆசை.

  ஜகமே தந்திரம் எப்போது

  ஜகமே தந்திரம் எப்போது

  ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என தான் நம்புவுதாக தனுஷ் ட்வீட் போட்டிருந்தார். ஆனால், இன்னமும் அந்த படம் எப்போது வெளியாகிறது என்றும் எதில் வெளியாகிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கர்ணன் ஏப்ரல் வெளியீடாக வரும் நிலையில், மார்ச் மாதம் ஜகமே தந்திரம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அண்ணனுடன்

  அண்ணனுடன்

  மேலும், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என தனுஷின் திரைப்பட பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தனது ரசிகர்களுக்கு தரமான என்டர்டெயின்மென்ட்டை தவறாமல் கொடுத்துக் கொண்டே உயர பறந்து கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். குடும்பத்துடன் கோயிலில் வழிபட்ட போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

  English summary
  Kollywood busy bee actor Dhanush will fly to Hollywood tonight for The Gray Man Shooting directed by Russo brothers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X