Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கவிருந்த நிலையில் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக 5 -6 மாதங்களை லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் தலைவர் 171 படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக தற்போது லோகேஷ் கனகராஜ் அப்டேட் செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட்டை அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். வரும் ஏப்ரல் 22ம் தேதி டைட்டில் ரிலீசாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்தின் வித்தியாசமான கெட்டப்பில் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டர் திரைத்துறை பிரபலங்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் மற்றும் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஜெயிலர் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூல் சாதனை செய்தது. இந்த வெற்றியை சன் பிக்சர்ஸ் படக்குழுவினருடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தில் மொய்தின் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினி நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
வேட்டையன் படம்: இந்நிலையில் தற்போது ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் வேட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டின் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவிருந்த நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக அதிக காலங்களை லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்டார்.
ஜூன் மாதத்தில் தலைவர் 171 சூட்டிங்: தலைவர் 171 படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்தில் படத்தின் டைட்டில் ரிலீசாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஜினியின் வித்தியாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் இந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் வாட்ச்களால் ஆன கை விலங்கை ரஜினிகாந்த் போட்டுள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் படம்: தலைவர் 171 படம் டைம் டிராவல் அடிப்படையில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் தன்னுடைய முந்தைய படங்களில் இருந்தது போல போதை சமாச்சாரங்கள் எதுவும் இருக்காது என்றும் படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ ஷேடில் ரஜினி நடித்துள்ளதாகவும் அதிரடி ஆக்சன் படமாக தலைவர் 171 படம் உருவாக உள்ளதாகவும் லோகேஷ் முன்னதாக தன்னுடைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இதனிடையே ரஜினியின் இந்த மாஸ் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் வாழ்த்து: இந்நிலையில் நடிகர் தனுஷ் ரஜினியின் இந்த போஸ்டரை தன்னடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, பிளாஸ்ட் என்று தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார். ரஜினி படங்களின் முக்கியமான அறிவிப்புகள், போஸ்டர்கள், டைட்டில் உள்ளிட்ட அப்டேட்களின்போது தனுஷ் எப்போதும் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினியுடனான பிரிவிற்கு பிறகும் இந்த நடைமுறையை அவர் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











