Dhanush: பொங்கல் வாழ்த்துடன் தனுஷ் வைத்த ட்ரீட்.. கொல மாசு சாரே!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடிகர். இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என சுதந்திரமாக நடைபோட்டு வருகிறார். தனுஷின் அடுத்தடுத்த கமிட்மென்ட்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் இயக்குநராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷின் ராயன் படம் வெளியாகி மாஸ் காட்டியது.
இந்நிலையில் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் இட்லி கடை படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார் தனுஷ். இதனிடையே இந்தப் படங்களுடன் தனுஷின் குபேரா படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கம். நடிப்பு. தயாரிப்பு, பாடலாசிரியர். பாடகர் என அனைத்து தளங்களிலும் அடுத்தடுத்து தன்னை இணைத்துக் கொண்டு வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு துவக்கத்திலேயே கேப்டன் மில்லர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படமும் மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்று நூறு கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ள தனுஷ் அடுத்ததாக இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்.

இட்லி கடை படம்: இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் எண்ட் கார்டு போடவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களையும் தற்போதே படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இந்த ஆண்டிலேயே தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என அடுத்தடுத்த படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள நிலையில் அவரது நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இயக்கத்தில் மாஸ் காட்டி வரும் தனுஷ் இட்லி கடை படத்தில் கிராமத்து கெட்டப்பில் காணப்படுகிறார்.

போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து: இந்த படத்தின் போஸ்டரை கடந்த 1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டமாக கொடுத்திருந்தார் தனுஷ். இதில் நடிகர் ராஜ்கிரணுடன் இணைந்து அவர் நல்ல பிள்ளையாக காணப்படுவதாக போஸ்டர் அமைந்திருந்தது. இந்நிலையில் நாளைய தினம் பொங்கலையொட்டி பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள தனுஷ், அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களையும் இட்லி கடை படத்திலிருந்து வெளியிட்டுள்ளார். முதல் போஸ்டரில் மரத்தடியில் கன்று குட்டியுடன் கிராமத்துக் கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். அடுத்ததாக நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்வதாக காணப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகி உள்ள இந்த போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ்: வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











