Rajini: எக்ஸ் மாமனாரை எப்போதுமே மறக்கமாட்டேன்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் அதுவுமா தனுஷ் பண்ண சம்பவம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே, திரைத்துறையினருக்கு கொண்டாட்டம்தான். ரஜினிகாந்த்தைப் பார்த்து தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து இன்றைக்கு உச்சத்தில் இருக்ககூடிய, வளர்ந்து வரக்கூடிய நடிகர்கள் ஏராளம் உள்ளனர். இவர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முன்னாள் மருமகனும் நடிகருமான தனுஷ், சூப்பர் ஸ்டாருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். வழக்கமாக பிறந்த நாளில் தனது இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களைச் சந்திப்பார். ஆனால் இம்முறை கூலி படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இதனால் இம்முறை ரசிகர்களைச் சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

சூப்பர் ஸ்டார் - லதா தம்பதியருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தினை மணந்தவர் நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்துரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தினை திருமணம் செய்யும்ப்போது பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.

ஆனால் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதற்காக, தனுஷுக்கு தமிழ் சினிமா உலகம் சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. தனது அர்பணிப்பினாலும் உழைப்பினாலும் இன்றைக்கு, நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குநராக, பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கின்றார்.

தனுஷ்: தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் மகன்கள் இவர்களுக்கு உள்ளனர். இப்படியான நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இப்படியான நிலையில் தனுஷ் தனது முன்னாள் மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனது சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து: அதில் அவர், " ஹேப்பி பர்த் டே டூ ஒன், ஒன்லி ஒன், சூப்பர் ஒன் சூப்பர் ஸ்டார். மாஸ் மற்றும் ஸ்டைல் என்றாலே அது நீங்கள்தான். எனது தலைவா ரஜினி சார்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பிறந்த நாள் வாழ்த்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகனாக இருந்த காலகட்டத்திலும், பொது வெளியில் அவர் குறித்து பேசும்போது, சூப்பர் ஸ்டார், தலைவர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல், அவரை வீட்டில்கூட முறை சொல்லி அழைத்ததில்லை எனவும், சார் சொல்லிதான் அழைப்பதாகவும்கூட ஒரு மேடையில் கூறியிருக்கின்றார்.

கவனம்: அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் விவாகரத்தை அறிவித்த பின்னரும்கூட, சூப்பர் ஸ்டார் குறித்து தனுஷ் பேசுகையில், தலைவர் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். மேலும், ராயன் படத்தில் நடித்த நடிகையான துஷாரா விஜயன், வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருப்பார். இது தொடர்பாக துஷாராவிடம் பேசும்போதுகூட தலைவர் என்றே குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனுஷ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதால், பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











