Captain Miller : பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறும் கேப்டன் மில்லர்.. 5ம் நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

சென்னை: தனுஷின் அட்டகாசமான நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஐந்தாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1930 முதல் 40களில் நடக்கும் பீரியட் ஜானரில் கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து மிரட்டியுள்ளார். தனது கிராம மக்களுக்காக பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்கும் போராளி, கொள்ளைக்கரான், ராணுவ வீரன் என நடிப்பில் வெரைட்டி காட்டி உள்ளர். கேப்டன் மில்லர் படம் பார்த்த அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தனுஷ் நடிப்பின் அசுரன் என்றும், கேப்டன் மில்லர் தரமான படைப்பு எனவும் பாராட்டியுள்ளார்.

Actor Dhanushs Captain Miller box office collection day 5

தனுஷின் கேப்டன் மில்லர்: காலனிய ஆட்சி காலத்தில், தென் தமிழக கிராமம் ஒன்றில் வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க சாதியினர் மற்றும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் ஆகியோரின் ஒடுக்குமுறையால் அடிமைகள்போல் வாழ்கின்றனர். இந்த அடக்குமுறையிலிருந்து தன் மக்களை மீட்டெடுக்க விரும்புகிறான் தனுஷ் அதற்காக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவனின் ஆசை. இதனால் கடுமையாக முயற்சி செய்து அவன், கேப்டன் மில்லர் என்ற ஆயுதப் போராளியாக மாறுகிறான். அவன் எப்படிப்பட்டப் போராளியாக விளங்கினான், தனது மக்களை அவனால் மீட்க முடிந்ததா என்பதைச் சொல்கிறது கதை.

அனைவரின் நடிப்பு சூப்பர்: மேலும், அரண்மனையைவிட்டு வெளியேறும் வேல்மதி என்கிற கேரக்டரில் பிரியங்கா மோகன் நேர்த்தியான நடிப்பை காட்டி உள்ளார். மேலும், எதிர்மறைக் கதாபாத்திரங்களில் வரும் ஜெயப்பிரகாஷ், ஜான் கோக்கென், துணைக் கதாபாத்திரங்களில் வரும் நிவேதிதா சதீஷ், குமரவேல், அப்துல் லீ ஆகியோர் சிறப்பான நடிப்பால் பாராட்டை பெற்றுள்ளனர். இத்திரைப்படத்தை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

5ம் நாள் வசூல்: கேப்டன் மில்லர் படம் வெளியான முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இரண்டு நாளில் 7 முதல் 9 கோடியும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 7 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகை தினமான திங்கள்கிழமை ரூ. 6.50 கோடியை வசூலித்தது. ஐந்தாம் தேதியான நேற்று ரூ 4.50 கோடியை வசூலித்துள்ளது. அதன்படி ஐந்து நாட்களில் ரூ.35.7 கோடியை வசூலித்துள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு முதல் நாள் இருந்த வரவேற்பை பார்த்த போது படம் நன்றாக கல்லாக்கட்டும் என ரசிகர்கள் நினைத்த நினையில், படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. ஆனால், சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், தனுஷின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X