Captain miller: கேப்டன் மில்லர் படத்தில் சீக்ரெட் கேரக்டர்.. சில தினங்களில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் வரும் டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

Actor Dhanushs Captain miller first single going to release next week

கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தன்னை சர்வதேச அளவில் சிறந்த நடிகராக நிலை நிறுத்தியுள்ளார். தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான வாத்தி படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் அவர் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கிலும் சார் என்ற பெயரில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் டிசம்பரில் ரிலீசாகவுள்ள நிலையில், பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை கண்முன் நிறுத்தும் வகையிலான காட்சி அமைப்புகளை படத்தின் டீசரில் காண முடிந்தது.

இந்நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள், பீரியட் படத்திற்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் முடுக்கி விட்டுள்ளார்.

Actor Dhanushs Captain miller first single going to release next week

இந்நிலையில் இந்தப் படத்தில் இதுவரை வெளியாகாத சீக்ரெட் கேரக்டர் ஒன்று அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருவி படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த அதிதி பாலன், கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கதைக்களத்தில் இவரது போர்ஷன்கள் மிகவும் முக்கியமாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் அடுத்தடுத்த பாகங்களாக உருவாகவுள்ள நிலையில், அடுத்த பாகத்தை கருத்தில் கொண்டு அதிதி பாலனின் போர்ஷன்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவு செய்துள்ள தனுஷ், தற்போது தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கை எடுத்து வருகிறார். இந்தப் படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X