அடுத்தடுத்து பெருமை சேர்க்கும் கேப்டன் மில்லர் படம்.. பிரிட்டன் தேசிய விருதை தட்டித் தூக்கிய தனுஷ்!

சென்னை: தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி கேப்டன் மில்லர் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில், சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. அடுத்ததாக மீண்டும் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Dhanush Captain miller Arun madheswaran

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாகவுள்ளதாகவும் விரைவில் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Dhanush Captain miller Arun madheswaran

கேப்டன் மில்லர் படம்: கடந்த ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையொட்டி தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்திருந்தது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் தனுஷுடன் இணைந்து நடித்த நிலையில் படம் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்து. கேப்டன் மில்லர் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி படமாக அமைந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

பிரிட்டன் தேசிய விருது: இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் படம் தற்போது பிரிட்டனின் தேசிய விருதை பெற்றுள்ளது.. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற கேட்டகிரியில் படம் இந்த விருதை தட்டி தூக்கியுள்ளது. இது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் எக்ஸ் தள பக்கத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் வசனங்களை எழுதியதில் தானும் பங்கேற்றது குறித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனுஷ் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush Captain miller Arun madheswaran

சிறந்த அயல்நாட்டு படம்: பிரிட்டன் தேசிய விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் பாக்ஷாக் படங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த அயல்நாட்டு படம் என்று கேட்டகிரியில் பிரிட்டனின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நேரில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் விருதினை பெற்றுக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் பல குழுவினருக்கு அவர் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X