Captain miller trailer: I am the devil.. அதிரடியாக வெளியான கேப்டன் மில்லர் பட டிரெயிலர்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தான் நடிக்கும் கேரக்டராகவே மாறி விடும் தனுஷின் கேரியரில் மைல்கல்லாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர் படம். தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த பேட்டிகள் உள்ளிட்டவை ஒருபுறம் வெளியாகிவரும் சூழலில் தற்போது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தன்னுடைய மகன்களுடன் இந்த நிகழ்ச்சியில் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக தனுஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் பேச்சு ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. பல விஷயங்களை அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மூன்றாவது படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக தனுஷ் மிக அதிகமான மெனக்கெடல்களை செய்துள்ளார். மிகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Actor Dhanushs Captain miller movie trailer released

தனுஷின் கேப்டன் மில்லர் படம்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி என அடுத்தடுத்த வித்தியாசமான ஜானர்களில் படங்களை கொடுத்துள்ள தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் சுதந்திர போராட்ட காலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் தனுஷை பார்க்க முடிகிறது. படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் பங்கேற்றிருந்தார் தனுஷ். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் அதிகமான உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகவும் பல இடங்களில் ரசிகர்களை அழவைக்கும் என்றும் படத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

அதிரடி சரவெடி டிரெயிலர்: ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க இந்த டிரெயிலரும் அதிரடி சரவெடியாக வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் ஆகியவையும் மாஸ் காட்டிய நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெயிலர் படத்திற்கான வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் இதுதான் என்று தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்களும் மிரட்டியுள்ளது டிரெயிலரில் தெரிகிறது.

டிரெயிலரை வெளியிட்ட தனுஷ்: இந்த டிரெயிலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு டிரெயிலர் வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றுடன் தனுஷ் தெரிவித்திருந்தார். இந்த டிரெயிலரை பார்த்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மிரட்டலான அனுபவங்களை பதிவு செய்து வரும் சூழலில் கேப்டன் மில்லர் டிரெயிலர் என்று அமைதியாக தனுஷ் ட்வீட் செய்துள்ளார். பீரியட் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம், சுதந்திர போராட்ட கால மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்: முன்னதாக ராக்கி, சாணி காயிதம் என்ற அழுத்தமான படங்களுக்கு சொந்தக்காரராக இருந்த அருண் மாதேஸ்வரன், இந்தப்படத்தின்மூலம் பீரியட் படத்தை உருவாக்கியுள்ளார். இதற்காக அவருடன் இணைந்து படக்குழுவினர் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளது டிரெயிலரில் அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்காக இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை பதிவு செய்து வருகின்றனர். மிரட்டலான அனுபவத்திற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X