Pongal Tamil Movies Box Office Collection: அயலான் VS கேப்டன் மில்லர்! எந்த படம் முன்னிலை தெரியுமா?
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு சிறப்பான மற்றும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளன. மேலும் தமிழில் மெர்ரி கிறிஸ்துமஸ், மிஷன் சேப்டர் 1 படங்களும் ரிலீசாகியுள்ளன.
இதனிடையே தெலுங்கிலும் ஹனுமான், குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களும் மாஸ் காட்டி வருகின்றன. கடந்த ஆண்டில் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பொங்கலையொட்டி ரிலீசாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷின் படங்கள் நேரடி மோதலுக்கு உள்ளாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷின் படங்கள் முதல்முறையாக மோதிய நிலையில் இரு படங்களும் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதேபோல ரொமாண்டிக் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய் -விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள மிஷன் சாப்டர் 1 படங்களும் ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளன. பொங்கலையொட்டி அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் வரும்நிலையில், இந்தப் படங்களுக்கு மிகச்சிறப்பான வசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.

பொங்கல் ரேஸ் படங்கள்: இன்னும் இரு தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாடை, மனதிற்கு பிடித்த சினிமா, குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாட்டம் என பல்வேறு திட்டங்களுடன் மக்கள் உள்ள நிலையில், திரைத்துறையினரும் தங்களது ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த ஆண்டில் விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பொங்கல் பண்டிகையை களைகட்ட செய்தன. இந்த ஆண்டிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் இன்றைய தினம் பொங்கலையொட்டி வெளியாகியுள்ளன.
தனுஷின் கேப்டன் மில்லர் படம்: இதில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படம் தற்போது ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மிரட்டலாக அமைந்துள்ளது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் அதிகமான திரையரங்குகளை கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கும் இந்தப் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இரவு காட்சிகளும் அதிகமாக புக் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முதலிடத்தில் கேப்டன் மில்லர்: இந்நிலையில் பொங்கல் ரேஸில் வெளியான படங்களில் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சிவகார்த்திகேயனின் அயலான் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி -கத்ரினா கையிப் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்டர் 1 படங்களும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மெர்ரி கிறிஸ்துமஸ் படம் மூலம் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார்.
4 படங்கள், வித்தியாசமான ஜானர்கள்: இந்த நான்கு படங்களும் வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை எதிர்கொண்ட நிலையில் நான்கு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான கேப்டன் மில்லர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறவில்லை. இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர்கள் இருந்தபோதிலும் தன்னுடைய தோள்களில் படத்தை அதிகமாக சுமந்துள்ளார் தனுஷ். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோரும் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். இதேபோல மற்ற படங்களும் ரசிகர்களை சிறப்பான வகையில் என்டர்டெயின் செய்துள்ளன.


Click it and Unblock the Notifications