Dhanush: தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் தனுஷின் டி50.. அடுத்தடுத்த ரிலீஸ்களால் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி நாளைய தினம் நடக்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் தனுஷின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய நிகழ்வை கதைக்களமாக கொண்டுள்ள நிலையில், இந்தப் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் நடித்ததை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உடனடியாக டி50 படத்தை துவங்கி, அதன் சூட்டிங்கையும் முடித்தள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா முரளி, சந்தீப் கிஷனுடன் முக்கியமான கேமியோ ரோலில் தனுஷும் நடித்துள்ளார். இந்தப் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த தனுஷ், மீண்டும் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் அடுத்தப்படத்தின் சூட்டிங்கையும் துவங்கிவிட்டார்.

Actor Dhanushs D50 movie going to Release on April 12th it seems

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் பேச்சை கேட்க ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தனுஷ் இயக்கத்தில் டி50 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் டி50. இந்தப் படத்திற்கு முன்னதாக தனுஷின் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் டி50 படம் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்: கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள டி50 படத்தில் தனுஷ் வித்தியாசமான மொட்டை கெட்டப்பில் நடித்துள்ளார். முன்னதாக கேப்டன் மில்லர் படத்தில் நீண்ட தலைமுடியுடன் நடித்த தனுஷ், அதற்கு நேரெதிராக டி50 படத்தில் மொட்டை கெட்டப்பில் நடித்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதைக்களம் வட சென்னையை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் புத்தாண்டு ரிலீஸ்?: இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்ரல் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்திலும் பாலிவுட்டில் ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் நடிக்க தனுஷ் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X