D50: ஏஆர் ரஹ்மான் இசையில் தர லோக்கல் குத்து பாடலுக்கு தயாராகும் தனுஷ்.. சூப்பரப்பு
சென்னை: நடிகர் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பரில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு உடனடியாக தனது அடுத்தப்படத்தில் இணைந்துள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் டி50 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இணைந்துள்ளனர்.

தனுஷின் டி50 படத்தில் இடம்பெறவுள்ள குத்துப்பாடல்: சினிமாவில் நடிகர் தனுஷ் தன்னுடைய எல்லைகளை கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் விரிவு படுத்தியுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாத்தி படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி இரு மொழிகளிலும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப்படமானது. இந்தப் படத்தின்மூலம் டோலிவுட்டிலும் நேரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார் தனுஷ்.
இந்தப் படத்தை தொடர்ந்து ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தில் தனுஷின் லுக் மற்றும் நடிப்பு மிரட்டலாக காணப்படுகிறது. டிசம்பரில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்தார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கு இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய டி51 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் இணைந்துள்ளனர்.
இதனிடையே தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி50 படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். கேப்டன் மில்லர் படத்தில் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்பட்ட தனுஷ், இந்தப் படத்தில் குறைந்த முடியுடன் நடித்துள்ளார். படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா தாஸ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர். வடசென்னை கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துவரும் நிலையில், படத்தில் தர லோக்கலாக ஒரு குத்து பாடல் இடம்பெறவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த டங்காமாரி பாடல் போல இந்தப் பாடலும் அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











