D50 movie: அக்டோபரில் நிறைவடையும் தனுஷின் டி50 படம்.. அடுத்தது எந்தப் படங்கள் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷின் வாத்தி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வருகிறது டி50 படம். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

நடிகர் தனுஷின் டி50 படம் அக்டோபரில் நிறைவடையவுள்ளதாக தகவல்: நடிகர் தனுஷ், தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என அதிரடி காட்டி வருபவர். துள்ளுவதோ இளமை படத்தில் சாதாரண பள்ளி மாணவனாக துவங்கிய இவரது நடிப்புப்பயணம், தற்போது கேப்டன் மில்லராக அதிரடி காட்ட தயாராகியுள்ளது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் பன்முகம் காட்டி வரும் தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது வாத்தி படம்.
தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியான வாத்தி படம், அங்கும் அவருக்கு நல்ல என்ட்ரியை கொடுத்துள்ளது. டோலிவுட்டில் நேரடியாக வெளியானது சார் படம். இந்தப் படம் அங்கும் நல்ல வசூலை வாரிக்குவித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். படம் டிசம்பரில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகி அதிரடி கிளப்பியது.
தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், பார்வதி உள்ளிட்டவர்கள் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப் படத்தின் சூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்றுள்ளார் தனுஷ். அவரது இயக்கம் மற்றும் டைரக்ஷனில் டி50 படம் உருவாகி வருகிறது.
டி50 படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷின் சகோதரர்களாக நடித்து வருகின்றனர். மேலும் அபர்ணா முரளி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்திற்காக தன்னுடைய முடியை ஷார்ட்டாக வெட்டியுள்ளார் தனுஷ். படத்தின் சூட்டிங் ஒரேகட்டமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சூட்டிங் அக்டோபரில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை நிறைவு செய்தவுடன் இந்த ஆண்டின் இறுதியிலேயே அடுத்ததாக இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகவுள்ள புதிய படத்தில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே பாலிவுட்டில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கவுள்ளார்.
தொடர்ந்து சிறப்பான கதைக்களத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராகவும் பான் இந்தியா ஸ்டாராகவும் காணப்படுகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி என வெற்றிப்படங்கள் வெளியான நிலையில், ரிலீசுக்கு முன்னதாகவே இவரது கேப்டன் மில்லர் படம் அதிரடியாக காணப்படுகிறது. இந்தப் படம் அதிரி புதிரி வெற்றியை தனுஷிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











