Raayan First Look: வெளியானது தனுஷின் டி50 பர்ஸ்ட் லுக்.. அட படத்தின் டைட்டில் ராயன்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து மாஸ் இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் அவரது நடிப்பில் வெளியானது கேப்டன் மில்லர் படம். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்திற்கு சிறப்பான வசூலை ரசிகர்கள் கொடுத்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். அதில் டி50 படத்தின் சூட்டிங் முற்றிலும் நிறைவடைந்துள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங் 70 சதவகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முற்றிலும் இளைஞர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதனிடையே பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது D51 படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே டி51 படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ளார். இதையொட்டியே தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Actor Dhanushs D50 movie title and first look released by the team

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்திருந்த அவரது நடிப்பில் கடந்த ஜனவரியில் கேப்டன் மில்லர் படம் வெளியானது. திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது.

தனுஷ் இயக்கத்தில் படங்கள்: இந்நிலையில் தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அவரது டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். டைட்டில் அறிவிக்கப்படாத இந்த படத்தின் தலைப்பு இன்றைய தினம் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ராயன் டைட்டில்: சன் பிக்சர்ஸ், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த டைட்டிலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் தனுஷ். அந்த வகையில் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான ப பாண்டி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வடக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக்: பாடல்களையும் அடுத்தடுத்து படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது வெளியாகி உள்ள தனுஷின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் மொட்டை தலையுடன் வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார். இதில் செஃப்கள் அணியும் உடையை அவர் அணிந்து உள்ளார். ஆனால் அவற்றில் ரத்தக்கறை காணப்படுகிறது அவரது பின்புறத்தில் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் காணப்படுவதாகவும் இந்த போஸ்டரில் காணப்படுகிறது. படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X