Actor Dhanush: வெளியானது தனுஷின் DD3 பட டைட்டில்.. அட க்யூட் தலைப்பாதான் வச்சிருக்காரு!
சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் கேப்டன் மில்லர் ஜனவரியில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படங்களை தொடர்ந்து சேகர் கம்முலா படத்தில் தனுஷ் இணையவுள்ளதாகவும் தொடர்ந்து பாலிவுட்டி படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தன்னுடைய இயக்கம் + நடிப்பில் அடுத்துப் படத்தை துவங்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் தன்னுடைய அக்கா மகன் பவிஷை ஹீரோவாக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளார். மேலும் படத்தில் பிரியா வாரியர், சமீபத்தில் லியோ படத்தில் கவனம் ஈர்த்த மேத்யூ தாமஸ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

நடிகர் தனுஷ்: திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணைந்து நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில், படம் ஜனவரியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வெறித்தனமான லுக்கிலும் நடிப்பிலும் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமாக 3 மாதங்களில் தன்னுடைய படங்களை நிறைவு செய்யும் தனுஷ், இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 10 மாதங்கள் நடித்ததாக முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடித்த தனுஷ், உடனடியாக தன்னுடைய நடிப்பு மற்றும் இயக்கத்தில் டி50 படத்தை துவங்கி தற்போது படத்தின் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக தனுஷ் இயக்கத்தில் ப பாண்டி படம் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் இடையில் ஒரு படத்தின் சூட்டிங்கை தன்னுடைய இயக்கத்தில் துவக்கினார் தனுஷ். அந்தப் படம் டிராப் ஆனது.

தனுஷ் இயக்கம்: தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தன்னுடைய இயக்கத்தில் தற்போது டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாகவும் தனுஷ் இயக்கத்தை கையில் எடுத்துள்ளார். முன்னதாக டிடி3 என்று இந்தப் படம் கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். தனுஷின் அக்கா மகன், பவிஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அனிகா சுரேந்திரன். தொடர்ந்து பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், சூட்டிங்கும் துவங்கியுள்ளது.
தனுஷின் டிடி3 படம்: படத்தில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ள நிலையில், அவர் அதற்குள்ளாக படத்தின் 3 பாடல்களை நிறைவு செய்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். படம் பக்கா காதல் கதையாக உருவாகவுள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்திருந்தார். யூத் சப்ஜெக்டாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷ், சரத்குமாரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலை அவர் தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











