ஒய் திஸ் கொலவெறி ஸ்டைலில் வெளியாகும் NEEK படத்தின் இரண்டாவது சிங்கிள்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷின் பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ளது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தை இயக்கி, நடித்து மற்றும் தயாரித்துள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
இந்நிலையில் வரும் 25ம் தேதி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் இளைஞர்களையும் அவர்களது காதலையும் மையமாகக் கொண்டு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் காதல் ஃபெயில் ரிலீசாகவுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து இயக்குநர் அவதாரத்தை தொடர்ந்து வருகிறார். பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் தனுஷ். முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான ராயன் படம் கேங்ஸ்டர் படமாக வெளியானது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்: இந்நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் காதல் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தப் படத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக இணைந்துள்ளார். மேலும் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவன தயாரிப்பாக உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது இட்லி கடை படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
NEEK படத்தின் இரண்டாவது பாடல்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் கோல்டன் ஸ்பேரோ வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து யூடியூபிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் ஆட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக இரண்டாவது சிங்களாக லவ் ஃபெயில் பாடல் வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷின் 3 படத்தில் இடம்பெற்று மாஸ் காட்டிய ஒய் திஸ் கொலவெறி பாடலை போல, இந்த பாடலும் சூப் சாங்காக வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப் சாங்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலே அதிரிபுதிரி வெற்றி பெற்ற நிலையில் இன்னும் இரு தினங்களில் வெளியாக உள்ள இரண்டாவது பாடலும் அதே போல ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பாடல் குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது சிறப்பான போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ள நிலையில், ஒய் திஸ் கொலவெறி பாடலை போல இந்தப்பாடலும் அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











