Raayan movie: ஆரம்பமானது அடங்காத அசுரனின் ஆட்டம்.. ராயன் பட ரிலீஸ் தேதி இதோ!
சென்னை: நடிகர் தனுஷ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்திப் கிஷன், காளிதாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ராயன். ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் என்பதால் ராயன் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 13ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
ஆனால் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் வெளியாகியுள்ள முதல் பாடலை தனுஷ் மற்றும் ஏஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். திருவிழா கொண்டாட்டத்துடன் உருவாகியுள்ள இந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா.

ராயன் படம்: நடிகர் தனுஷ் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருபவர். அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் தன்னுடைய சிறப்பான கதை தேர்வுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தனுஷ். ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் முன்னதாகவே ஷூட்டிங் நிறைவடைந்து ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் தற்போது ஜூன் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கம்: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தன்னுடைய குடும்பத்தினரின் உயிரிழப்பிற்கு தனுஷ் பழி வாங்குவதாக கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் ரோட்டோர உணவுக்கடை நடத்தி வருபவராக காணப்பட்டார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. இதனுடன் படத்தின் ரிலீஸ் ஜூன் 13ம் தேதி என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்: அடங்காத அசுரா என்று துவங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை அவரே எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா. பாடல் மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பாடல் லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த பாடலில் ராவண வதம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருவிழாவை பின்புலமாகக் கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ப பாண்டி படத்தில் வயதான நபரின் உணர்வுகளை புரிய வைத்த தனுஷ், ராயன் படத்தில் கேங்ஸ்டர் கதைகளத்தை கையில் எடுத்துள்ளார்.
அடங்காத அசுரா பாடல்: படத்தில் தனுஷிற்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் நடித்துள்ளனர். படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், சரவணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள சூழலில் அவர்களின் கேரக்டர் எந்த மாதிரியான தாக்கத்தை படத்தில் ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்த்து ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள அடங்காத அசுரா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











