Actor Dhanush: போட்றா வெடிய.. வெளியானது தனுஷின் ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக இணைத்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு அவரது இயக்கத்தில் ப பாண்டி படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளை கழித்து அவரது இயக்கத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது. படத்தில் கேமியோ கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

வடசென்னையை மையமாகக் கொண்டு இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் ஜூன் மாதத்திற்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

Dhanush tamil cinema AR Rahman Sun pictures

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராயன்/ கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய முதல் படமான ப பாண்டி படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் அவர் இயக்கத் தயாரானார். படத்தை அறிவிக்கவும் செய்த நிலையில், படம் அறிவிப்புடன் நின்று போனது. இந்நிலையில் ப பாண்டி படத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கத்தின் உருவாகியுள்ளது ராயன் படம். படம் வட சென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கம்: தன்னுடைய முதல் படத்தில் வயதான நபரின் உணர்வுகளை மற்றும் உறவு சிக்கல்களை மையமாகக் கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். இதன் பிளாஷ்பேக்கில் நிறைவேறாத ஒரு மெல்லிய காதலும் காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது படத்தில் கேங்ஸ்டர் கதைகளத்தில் குடும்ப செண்டிமெண்ட்டை இணைத்து அவர் ராயன் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஜூலை 26ம் தேதி ரிலீஸ்: இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் இம்மாதம் ஜூன் மாதத்தில் அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்திலும் இந்த படம் ரிலீசாகாத நிலையில் தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை மாதம் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் உள்ளிட்டவர்கள் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

அடுத்தடுத்த படங்கள்: இயக்குனராகவும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார் தனுஷ். ராயன் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தன்னுடைய வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தானே தயாரிக்கவும் செய்து வருகிறார். இந்நிலையின் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகவும் செய்து வருகிறார்.

ஏஆர் ரஹ்மான் இசை: இந்நிலையில் அவரது இயக்கத்தில் ஏழு ஆண்டுகளை கடந்து வெளியாகவுள்ள ராயன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X