Dhanush: தரமான சம்பவம் செய்த தனுஷ்.. இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நித்யாமேனன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் அருண் விஜய் வில்லனாகவும், ராஜ் கிரண் முக்கிய ரோலிலும் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் 10ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கினார். இளம் வயதில் வரும் முதல் காதலின் ஆழத்தை படத்தில் அழகாக சொல்லி இருந்தார் தனுஷ். இந்த படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படமாக ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததாக சொல்லப்பட்டாலும் படத்தின் பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பவர் பாண்டி படத்தை எடுத்த தனுஷா, ராயன் படத்தை இயக்கினார் என்று சொல்லும் அளவிற்கு அந்த படத்தில் பல ரத்தக்காட்சிகள் இருந்தன.

dhanush idli kadai first look

நடிகர் தனுஷ்: இந்த படத்தை தொடர்ந்து, சகோதரி மகனையும், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரையும் வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கியது மட்டுமில்லாமல் உண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

தனுஷின் 52வது படம்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், தனுஷூடன் திருச்சிற்றம்பலத்தில் நடித்த நித்யாமேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்: இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி அதன் சுற்று வட்டார பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு தனுஷூன் உடல் நிலை காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தனுஷூன் இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் வேட்டி சட்டையில் நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டு, ஒரு கையில் தூக்குடனும், மறு கையில் காய்கறி பையை வைத்து இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது டிரெண்டாகி வருகிறது.

dhanush idli kadai first look

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X