தனுஷின் குபேரா க்ளிம்ப்ஸ் ரிலீஸ்.. அய்யய்யோ இங்கேயும் தேவிஸ்ரீ பிரசாத் சவுண்ட் ஜாஸ்தியா இருக்கே!

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மிரட்டலாக அமைந்து வருகின்றன. இந்த ஆண்டிலேயே அவரது கேப்டன் மில்லர், ராயன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளன. இதில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இணைந்திருந்த கேப்டன் மில்லர் படம் பீரியட் படமாக வெளியாகி மாஸ் காட்டியது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படமும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார். தொடர்ந்து இட்லி கடை படத்தையும் இயக்கி வருகிறார்.

dhanush kubera movie devisri prasad

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்கள் வெளியாகி மிகப்பெரிய சக்சஸை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளன. இதில் ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றிகளை மற்றும் வரவேற்பை தனுஷிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்கத்தில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார்.

குபேரா படம்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் அடுத்த ஆண்டு காதலர் தின வெளியீடாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தின் சில பேட்ச் வேலைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது.

குபேரா கிளிம்ப்ஸ் ரிலீஸ்: இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் குபேரா படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் நிறைவு செய்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகி உள்ள படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மிகச் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வித்தியாசமான கெட்டப்புகளில் இதில் காணப்படுகிறார். பட்டு வேட்டி சட்டை போட்டு ஒரு காட்சியில் காணப்படும் அவர் அடுத்த காட்சியில் யாசகராக தென்படுகிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசை: இந்நிலையில் படத்தில் நாகார்ஜுனாவின் அழகான குடும்பம் காட்டப்படுகிறது. ராஷ்மிகா மந்தனாவும் இந்த படத்தில் மிகவும் இயல்பான கேரக்டரில் நடித்துள்ளது இந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் கங்குவா படத்தில் காதை கிழிக்கும் இசையை அவர் போட்டது போலவே இந்த படத்தில் செய்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கேற்பவே இந்த வீடியோவில் ஃபாஸ்ட்டான இசையை அவர் பயன்படுத்தியுள்ளார். படத்தின் இசை காதுகளை கிழிக்காமல் இருந்தால் சரிதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X