Actor Dhanush: 10 மணிநேரம் குப்பைக்குழியில் இருந்தபடி நடித்த தனுஷ்.. குபேரா பட அப்டேட் இதோ!

மும்பை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தெலுங்கு பட இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது அடுத்ததாக பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

விரைவில் குபேரா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் மும்பை தாராவியை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவரும் சூழலில் படத்தில் வில்லனாக நாகார்ஜுனா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Dhanush s Kubera movie shooting spot update is here

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் குபேரா. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். கடந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தன்னுடைய இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்தார் தனுஷ்.

குபேரா படம்: இதில் ராயன் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்த சூழலில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தான் கமிட் செய்தபடி குபேரா படத்தின் சூட்டிங்கில் இணைந்தார் தனுஷ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. முக்கியமான கேரக்டரில் நடிகர் நாகார்ஜுனா நடித்து வருகிறார். அவர் இந்த படத்தின் வில்லனாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ள சூழலில் தனுஷின் போஸ்டரில் அவர் யாசகன் போன்ற லுக்கிங் காணப்பட்டார்.

குப்பைக்குழியில் 10 மணிநேரம்: பேரா படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து கேங்ஸ்டராக மாறுவதாக படத்தின் கதைக்களம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்சும் வெளியான சூழலில் அதில் கட்டு கட்டான பணத்துடன் அவர் காணப்படுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் குப்பை குழியில் நடிகர் தனுஷ் தொடர்ந்து பத்து மணி நேரம் மாஸ்க் கூட இல்லாமல் நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தெலுங்குப்பட இயக்குநர்: இந்த படத்திற்காக தனுஷ் மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டு நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. நேரடி தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து இணைந்து வருகிறார் தனுஷ். இதனிடையே அடுத்ததாக ஸ்ரீகாரம் பட இயக்குனர் கிஷோர் பியுடன் இணைந்து அடுத்த படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தனுஷிற்கு பிரபல தெலுங்குப்பட நாயகி, ஸ்ரீலீலா ஜோடியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X