தனுஷின் ராயனுக்கு முன்பு வெளியாகும் குபேரா டீசர்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் குபேரா. மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷின் ராயன் படமும் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் அடுத்ததாக படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ப பாண்டி படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார் தனுஷ். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் ராயன் படத்திற்கு முன்னதாகவே குபேரா படத்தின் டீசர் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Dhanush s Kubera movie teaser to be released on May 2nd it seems

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ரிலீசையொட்டி ராயன் படத்தின் ரிலீசில் மாறுபாடு இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ப பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷ் ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் வடசென்னையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராயன் படம்: இந்தப் படத்தில் ரோட்டோர உணவுக்கடையை நடத்தி வரும் தனுஷின் தம்பிகளாக காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் முன்னதாக வெளியான சூழலில் அடுத்ததாக படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் உள்ளதால் இந்த படத்தின் டீசர் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ.

குபேரா பட டீசர்: படத்தை தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனிடையே, மே மாதம் 2ம் தேதி குபேரா படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ராயன் படத்தின் டீசரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் முன்னதாக குபேரா படத்தின் டீசர் வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு பட நிறுவனங்கள் எப்போதும் தங்களது தயாரிப்பு மற்றும் பல விஷயங்களையும் சிறப்பாக திட்டமிட்டு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் முன்னதாகவே குபேரா படத்தின் டீசர் வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கேங்ஸ்டர் கதைக்களம்: குபேரா படமும் மும்பையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தனுசுடன் இணைந்து நடித்து வருகின்றனர். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ள சூழலில் இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யாசகன் லுக்கில் இந்த போஸ்டரில் தனுஷ் காணப்பட்டார். இந்நிலையில் டீசர் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இன்னும் சில தினங்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X