தனுஷ் தொட்டதெல்லாம் பொன்தான்.. கோல்டன் ஸ்பேரோ செய்துள்ள புதிய சாதனை.. அக்கா மகன் ஹேப்பி!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து சிறப்பான படங்களில் தன்னை இணைத்துவரும் நிலையில் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ்.
இந்த படத்தில் தனுஷுடன் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அவரது ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜனவரியில் அவரது கேப்டன் மில்லர் படமும் கடந்த மாதத்தில் அவரது ராயன் படமும் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்று தந்துள்ளன. மேலும் இந்த படங்கள் வசூலையும் குவித்துள்ள நிலையில் அடுத்ததாக தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
கோல்டன் ஸ்பேரோ பாடல்: முற்றிலும் இளைஞர்களை வைத்து கொண்டாட்டத்துடன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் முக்கியமான கேரக்டர்களில் இணைந்துள்ள நிலையில் அவரது அக்கா மகன் லீட்கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாடல் கோல்டன் ஸ்பேரோ வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த பாடலில் பிரியங்கா மோகன் சிறப்பான ஆட்டத்தை போட்டுள்ளார். மேலும் பாடலில் அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் காணப்படுவதையும் பார்க்க முடிகிறது.

10 மில்லியன் வியூஸ்: இந்த உற்சாக கொண்டாட்டம் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டதை தடுக்க முடியவில்லை. படத்திற்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் குமார் பாடலை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கான களமாக மாற்றிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 12 தினங்களில் இந்த பாடல் 10 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. இது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வொண்டர்பார் நிறுவனம் மேலும் படம் spotifyயில் 1 மில்லியனையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை பெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் நடிகர் விஜய் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ள போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
சிங்கர் சுப்லாஷினி உற்சாகம்: இந்த பாடல் மூலம் பாடகி சுப்லாஷினி பாடகியாக அறிமுகமாகியுள்ளார். அறிமுக பாடலிலேயே ஜிவி பிரகாஷ், தனுஷ் மற்றும் அறிவு ஆகியோரும் இணைந்து பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் சுப்லாஷினி. துவக்கத்தில் கோல்டன் ஸ்பேரோ தனக்கு அதிகமான கவனத்தை பெற்று தரவில்லை என்றும் அறிவு. தனுஷ், ஜிவி பிரகாஷே அதிக கவனத்தை பெற்றதாகவும் சுப்லாஷினி தெரிவித்துள்ளார். ஆனால் தான் தற்போது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளதாகவும் தன்னுடைய வாய்ஸ் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











