அக்கா மகனுக்கு அழகழகா பாட்டை இறக்குறாரே தனுஷ்.. காதலர்கள் கொண்டாடும் ”யேடி” பாட்டு எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுப்பதுடன் வசூலையும் குவித்து வருகிறது. அந்த வகையில் நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் பன்முகம் காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என அதகளம் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வாத்தி படம் நேரடியாக தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், டோலிவுட்டிலும் தன்னுடைய சக்சஸை நிரூபித்துள்ளார். தற்போது அதிகமாக இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Dhanush Nilavukku en mel ennadi kobam movie tamil cinema

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் ஒவ்வொரு படமாக களமிறக்கி வருகிறார். ப பாண்டி படத்தை தொடர்ந்து சில ஆண்டுகள் இயக்கத்தின் மீது கவனம் செலுத்த நேரமில்லாமல் ஒதுங்கி இருந்தார் தனுஷ். இந்நிலையில் ராயன் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய இயக்க அவதாரத்தை மேற்கொண்டார். ராயன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

ராயன் படம்: இந்த படத்தின் வெற்றிக்கு தனுஷின் இயக்கத்துடன் ஏஆர் ரஹ்மானின் இசையும் காரணமாக இணைந்து கொண்டது. இவர்கள் இருவரின் கூட்டணியில் படம் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ்.. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட இளைஞர்கள் பட்டாளம் இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகின்றன.

NEEK படத்தின் அடுத்த பாடல்: இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் மூன்றாவது பாடல் ரிலீசாகியுள்ளது. யேடி என்று துவங்கும் இந்த பாடல் சூப்பர் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை ஜோனிதா காந்தியுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ளார். அனிமேஷனை மையமாகக் கொண்டு இந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் பாடல்களாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பாடலும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது. தன்னுடைய அக்கா மகனுக்காக தனுஷ் மிகப் பெரிய அளவில் மெனக்கிடுவது இதன் மூலம் தெரிய வருகிறது.

தனுஷ் வாய்ஸ்: அவரே இந்த பாடலையும் பாடியுள்ளது மேலும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பாடலில் பவிஷுடன் அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் ராயன் படத்தைப் போலவே இந்த படமும் தனுஷின் இயக்கத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராயன் படத்தில் அழுத்தமான கதைகளத்துடன் களமிறங்கிய தனுஷ், இந்த படத்தில் காதலை மையமாகக் கொண்டு முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். அதையொட்டி அடுத்தடுத்து பாடல்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X