தனுஷிற்கு வில்லனாகும் அருண் விஜய்.. நடிப்பு அசுரனின் இயக்கத்தில் உருவாகும் டி52 படத்தின் அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார். இந்த ஆண்டிலேயே அவரது கேப்டன் மில்லர், ராயன் படங்கள் வெளியாகி வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் உருவாகவுள்ள டி52 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இதனிடையே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படங்களில் ஒன்று இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஒரே ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்த 3 படங்களின் ரிலீஸ் அவரது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

dhanush

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நிற்கக்கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த கேப்டன் மில்லர் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மாஸ் காட்டியது. பீரியட் படமாக வெளியான இந்தப் படத்திற்காக மிகப்பெரிய மெனக்கெடலை கொடுத்திருந்தார் தனுஷ். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருந்த ராயன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது. இந்தப் படத்தை கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கியிருந்தார் தனுஷ்.

ராயன் படத்தின் வெற்றி: படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தனது வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்துள்ளார். முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாகியுள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமாரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்தப் படங்கள்: இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து கேப்டன் மில்லர், ராயன் படங்கள் ரிலீசான நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதனிடையே அடுத்தடுத்த படங்களை இயக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.

டி52 படத்தின் அறிவிப்பு: இவருக்கு மட்டும் எப்படித்தான் நேரம் அமைகிறதோ என்று தோன்றும் வகையில அடுத்தடுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பம்பரமாக சுழன்று வருகிறார். இதனிடையே அவரது இயக்கத்தில் 4வது படமாக டி52 படத்தின் அறிவிப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக படத் தயாரிப்பில் இணைந்துள்ளது குறித்தும் முதல் படத்திலேயே நடிப்பு அசுரனுடன் இணையவுள்ளது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு ஓம் நமசிவாயா என்று தனுஷும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

dhanush

தனுஷ் இயக்கும் 4வது படம்: படத்தில் தனுஷ் லீட் கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாகியுள்ளார் நித்யா மேனன். மேலும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரணும் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகிறார் தனுஷ். இவர் அதிகமான ஸ்கிரிப்ட்களை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்கள் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தனுஷ் அடுத்தடுத்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை நிறைவு செய்துள்ளார். இதனிடையே அவரது இயக்கத்தில் அடுத்தப்படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X