தனுஷ் பாட.. பிரியங்கா மோகன் ஆட.. அனிகா சுரேந்திரன் நடித்துள்ள NEEK முதல் பாடல் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி உள்ள ராயன் படம் மிகச் சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து கொண்டாட்ட கதைக்களத்தில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

dhanush tamil cinema

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ராயன் படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்து நூறு கோடி ரூபாய்க்கு கிளப்பிலும் இணைந்துள்ளது. முன்னதாக ப பாண்டி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்ததால் தன்னுடைய விருப்பத்திற்குரிய இயக்கத்தை தள்ளி வைத்திருந்தார். ஆனாலும் சில மாதங்களை தன்னுடைய பேஷனுக்காக ஒதுக்கிய தனுஷ், ராயன் படத்தை அதிரடி சரவெடியாக கொடுத்திருந்தார். இந்த படத்தில் கேங்ஸ்டர் கதைகளத்தை கையில் எடுத்து அதை மிகச்சிறப்பான வெற்றி படைப்பாக மாற்றியுள்ளார் தனுஷ்.

ராயன் படத்தை தொடர்ந்து உடனடியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முற்றிலும் இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். தனுஷின் அக்கா மகன் பவிஷ் இந்தப் படத்தில் ஹீரோவாகியுள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் படத்தில் இணைந்துள்ளனர். தனுஷ் மற்றும் சரத்குமாரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

கோல்டன் ஸ்பேரோ என்ற இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் மடிசார் கட்டிக்கொண்டு சூப்பரான ஆட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த பாடலில் ஜிவி பிரகாசும் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அனைகா உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் இந்த பாடலில் சூப்பர் ஆட்டம் போட்டுள்ளனர். வைப் செய்யும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடகர் அறிவு இந்த பாடலை எழுதி பாடியும் உள்ளார். மொத்தத்தில் இளம் ரசிகர்களை கவரும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. முன்னதாக ராயன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ராயன் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்

ராயன் படத்தில் அழுத்தமான கதைக்களத்தில் உருவாக்கியிருந்த தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து ரொமாண்டிக் ஜானரில் உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனுஷ் இந்தப் படத்தை தொடர்ந்து 4வதாகவும் அடுத்தப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக நடிகை நித்யா மேனன் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.தானும் தனுஷும் இந்தப் படத்தில் மீண்டும் இணையவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X