Actor Dhanush: காதலர் தினத்தில் ரிலீசாகும் தனுஷ் படம்.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் ரிலீசான ராயன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தை சிறப்பாக கொடுத்திருந்தார் தனுஷ். படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தன.

இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் படங்களை உருவாக்கி வருகிறார். மற்ற இயக்குநர்களையும் விட்டுவிடாமல் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இதையடுத்து இட்லிகடை படத்தையும் இயக்கி வருகிறார்.

dhanush itli kadai movie

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான நடிகராக தன்னை உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் அடுத்தடுத்த கேப்டன் மில்லர், ராயன் படங்கள் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. இதில் ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக அமைந்தன. இந்தப் படம் அதிரடி சரவெடியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் தனுஷ்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்: அடுத்ததாக தனுஷின் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ளது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம். இந்தப் படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் அனிகா சுரேந்தரன், பிரியா வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப்படம் இளமை கொண்டாட்டத்துடன் உருவாகியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

காதலர் தின ரிலீசுக்கு தயாராகும் படம்: இந்தப் பாடலில் படத்தின் நடிகர்கள், நடிகைகளுடன் பிரியங்கா மோகன் சூப்பர் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்தப் பாடலை ஜிவி பிரகாஷ், தனுஷ், அறிவு இவர்களுடன் சுபலாஷினியும் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டநிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முற்றிலும் இளைஞர்களை வைத்து ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இட்லி கடை படம்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக இட்லி கடை படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். தேனி உள்ளிட்ட இடஙகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் தேனியில் நடந்துவரும் சூழலில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் பாங்காக் செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் தன்னை மிகவும் பிசியாக்கி வருகிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X