அட்ராசக்க.. தியேட்டரில் மாஸ் காட்ட வரும் ‘புதுப்பேட்டை‘.. 4K தரத்துடன் ரீ ரிலீஸ்!

சென்னை: நடிகர் தனுஷின் திரை வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் புதுப்பேட்டை. அந்த திரைப்படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்கிற கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதும் அந்த படத்தின் மீதான ஈர்ப்பு இன்றளவும் குறையாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பேட்டை திரைப்படம் தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தியேட்டரில் வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை.
காதல் கோட்டை, 7ஜி ரெயின்போ காலனி என காதல் படங்களை கொடுத்து ரசிகர்களை காதல் ரசத்தில் மூழ்கடித்த செல்வராகவன், முதல் முதலாக இறங்கி எடுத்த கேங்ஸ்டர் திரைப்படம் புதுப்பேட்டை. இதில்,
தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம்பெருமாள், பாலா சிங், பசி சத்யா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்று வரை இளசுகள் கேட்டு ஆட்டம் போடும் பாடலாகவே உள்ளது.

pudhupettai Dhanush re release
Photo Credit:

புதுப்பேட்டை: இந்த படம் வெளியாவதற்கு முன்பு, தனுஷ் கேங்ஸ்டரா? ரௌடியா நடிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டாமா.. இவன் பெரிய ரவுடினு சொன்னா யாரு ஏத்துப்பாங்க என பலவிதமான விமர்சனங்கள் வந்தன. ஆனால், படம் வெளியான பிறகு தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி, இளக்காரமாக பேசியவர்களுக்கு தனது நடிப்பின் மூலம் சரியாக பதிலடி கொடுத்திருந்தார். அப்பா கொன்றுவிட போகிற என்ற பயத்தில் இரவு முழுக்க தூங்காமல் இருக்கும் காட்சியும், தொண்டையில் ஆபரேஷன்... தொண்டையில் ஆபரேஷன்.. என கண்ணை பெரிதாக்கி நடித்த காட்சியை பார்த்தவர்கள் வாயடைந்து போனார்கள்.

மிரட்டலான நடிப்பு: அதே போல விலைமாதுவாக சினேகா கிருஷ்ணவேணி ரோலில் நடித்திருந்தார், அவருக்காக அன்புவை எதிர்த்து சண்டை போட்ட சீன், நண்பனின் தங்கை செல்வியை பார்த்ததும், அனுமதி இல்லாமல் தாலி கட்டியது, பின் அண்ணனை கொலை செய்துவிடுவேன் என செல்வியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும், தனுஷ் கொக்கி குமாராகவே வாழ்ந்து இருப்பார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு எத்தனையோ கேங்ஸ்டர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து இருந்தாலும், இந்த படம் போல எந்த திரைப்படமும் மனதில் நிற்கவில்லை. இப்போதும் கூட புதுப்பேட்டை ரசிகர்கள் பலர், புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்போது வரும் என அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.

ரீ ரிலீஸ்: இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டுன 'புதுப்பேட்டை' திரைப்படம், 4K தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றினார். விஜய் சூர்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை ஜூலை 26ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் ஒலி தரத்துடன், 'புதுப்பேட்டை' படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மீண்டும் திரைக்கு வருவதன் மூலம், பழைய ரசிகர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் இந்த திரைப்படத்தை திரையில் பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X