Dhanush: ரசிகர்கள் கொண்டாடும் ராயன் படம்.. நாங்க மட்டும் சும்மா இருப்போமா.. கொண்டாடிய டீம்!
சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ராயன். நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கியுள்ள தனுஷ் கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்த படத்தை மிகச் சிறப்பாக கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் வெளியாகியுள்ளது.
தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்ற போதிலும் தன்னுடைய அழுத்தமான திரைக்கதை மூலம் படத்தை சிறப்பாக்கியுள்ளார் தனுஷ். முதல் நாளிலேயே இந்த படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது. இந்த சந்தோஷ தருணத்தை தன்னுடைய டீமுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் தனுஷ்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் 50வது படமாக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படம் முதல் நாளிலேயே சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரண்டாவது படம். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் இயக்கத்திலும் நடிப்பிலும் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக தன்னுடைய சொந்த தயாரிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வரும் தனுஷ், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே அடுத்த படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அழுத்தமான கதைக்களம்: தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ் விரைவில் இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில் நேற்று வெளியாகி உள்ள ராயன் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களின் சாயலில் இருந்தாலும் அந்த படங்களை விட அழுத்தமான கதைக்களத்தில் வெளியாகி உள்ளதாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.
ராயன் டீம் கொண்டாட்டம்: இந்த படத்தில் தனுஷுடன் காளிதாஸ், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், எஸ்ஜே சூர்யா, சரவணன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படததில் சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோரின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தனுஷ் தன்னுடைய டீமுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்ட தருணங்களின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாட்டமாக போஸ் கொடுத்துள்ளனர்.
தனுஷ் கொண்டாட்டம்: புகைப்படத்தில் தனுஷும் காணப்படுகிறார். நீண்ட காலங்களாக இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த தனுஷ், தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் 2வது படமாக ராயன் படத்தை கொடுத்துள்ளார். இயக்குனராக அவரது இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அவர் சிறப்பான திரைக்கதை படத்தை அழகாக்கியுள்ளார். ராயன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தனுஷின் அடுத்த படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றுள்ளது. இந்தப்படம் முற்றிலும் இளைஞர்களை மையமாகக் கொண்டு காதல் படமாக உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











