Dhanush: ராயன் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்.. கலக்கலான சந்தீப் கிஷன் -அபர்ணா பாலமுரளி ஜோடி!

சென்னை: நடிகர் தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ள படம் ராயன். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தனுஷின் 50வது படமான ராயன் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தின் இசை வெளியீடு குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 1ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Dhanush s Raayan movie 2nd single release update is here

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நீண்ட காலங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ராயன். இந்தப் படம் ஏராளமான ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் பிரமாண்டமான வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாஸ் காட்டிய ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை குறுகிய கால தயாரிப்பாக இயக்கி முடித்துள்ளார் தனுஷ். ஆயினும் அவர் கதையில் மற்றும் காட்சி அமைப்புகளில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளவில்லை என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளைய தினம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது சிங்கிள் அப்டேட்: இந்த இரண்டாவது சிங்கிள் குறித்த போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சந்திப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இருவரும் சைக்கிளில் ரொமாண்டிக்காக செல்வதாக காணப்படுகிறது. இந்த போஸ்டர் ரசிகர்களை கவரும் வகையிலும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனுஷின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக அவரின் கேங்ஸ்டர் கதைக்களம் வருவதாக படக்குழு சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் கெட்டப்: இதனிடையே தன்னுடைய குடும்பத்தினரின் இழப்பிற்கு காரணமானவர்களை தனுஷ் பழி வாங்குவதாக இந்த படத்தின் கதைக்களம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற படம் குறித்த பல்வேறு யூகங்கள் வெளியாகி வரும் சூழலில் இன்னும் சில தினங்களில் இந்த படம் ரிலீசாகி அந்த யூகங்களுக்கு விடை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மொட்டை தலையுடன் கூடிய கெட்டப்பில் தனுஷ் நடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் அவர் நீண்ட தாடி, தலை முடி சகிதம் நடித்திருந்த சூழலில் இந்த படத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் அவர் தோன்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X